சந்தானத்தின் பிஸ்கோத் - துப்பாக்கியில ரோஜா.. தெறிக்கும் புல்லட்ஸ்.! வித்தியாசமான புதிய லுக்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

சந்தானத்தின் பிஸ்கோத் பட ஃபர்ஸ்ட் லுக் | santhanam r kannan's biskoth first look is out.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கியவர் சந்தானம். இவர் தற்போது முழு நேர ஹீரோவாக மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த தில்லுக்கு துட்டு, ஏ-1 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இவர் தற்போது ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கும் பிஸ்கோத் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிஸ்கோத் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. ரெட்ரோ ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த போஸ்டரில் சந்தானத்தின் லுக் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாக பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்கு செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை எனவும் கூறப்படுகிறது.

Entertainment sub editor