Breaking: இயக்குநர் அட்லியின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு - ஹீரோ யார் தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்'எந்திரன்', 'நண்பன்' படங்களில் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அட்லி இயக்குநராக அறிமுகமான 'ராஜா ராணி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

தளபதி விஜய்யுடன் 'தெறி' படத்தில் இணைந்த அவர் அந்த படம் வெற்றி பெற, தொடர்ந்து அவர் இயக்கிய 'மெர்சல்', 'பிகில்' என மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. இதன் ஒரு பகுதியாக இயக்குநர் அட்லி தனது ஏ ஃபார் ஆப்பிள் புரொடக்சன்ஸ் சார்பாக ஜீவா நடிப்பில் 'சங்கிலி புங்கிலி கதவத் தொற' என்ற படத்தை தயாரித்திருந்தார்.
இதனையடுத்து அட்லி தயாரிக்கவிருக்கும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி அட்லி ஏ ஃபார் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கும் இரண்டாவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (ஏப்ரல் 12) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான அறிவிப்புடன் வெளியான போஸ்டரில் மங்கலாக ஒரு முகம் தெரிந்தது. அந்த முகம் 'கைதி', 'மாஸ்டர்' பட நடிகர் அர்ஜூன் தாஸ் முகம் போன்று இருந்தது. இதனையடுத்து எங்கள் தரப்பில் விசாரிக்கையில் அது அர்ஜூன் தாஸ் என்பது தெரியவந்துள்ளது.
Happy to present from our production @aforapple_offcl https://t.co/1x9k0t1NPe
— atlee (@Atlee_dir) April 11, 2020