சந்தானத்தின் 'டகால்டி' லுக் இதோ !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காமெடியனாக அறிமுகமாகி ஹிரோவாக புரமோஷன் ஆகி வெற்றி பெற்ற நடிகர்களில் ஒருவர் சந்தானம். இவர் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு', 'சக்க போடு போடு ராஜா', 'தில்லுக்கு துட்டு 2' போன்ற படங்கள் நல்ல வசூலை பெற்றுத்தந்தன

Actor Santhanam’s first look from Dagaalty

இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் படம் ஒன்றை இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கி வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலை படக்குழுவினர்  வெளியிட்டுள்ளனர். இந்த படத்திற்கு 'டகால்டி' என்ற டைட்டில் வைக்கப்பட்டு டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ரித்திகா சென் என்பவர் நடித்து வருகிறார். இவர் ஒரு பெங்காலி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சந்தானம் நண்பராக யோகிபாபு நடித்து வருகிறார். சந்தானமும் யோகிபாபுவும் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்ளும் காட்சிகள் இந்த படத்தில் அதிகம் இருக்கின்றதாம்.