சந்தானம் - யோகி பாபு டீம் போட்டு இந்த மாசமே உங்கள சந்திக்க வராங்க , சிரிக்க ரெடியா!
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 10, 2020 04:29 PM
காமெடி கதாப்பாத்திரங்களில் இருந்து காமெடி ஹீரோ என்று தனி ட்ராக் அமைத்துக்கொண்டவர் நடிகர் சந்தானம். இவர் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஏ1 பத்துக்கு பிறகு இவர் நடித்த டகால்டி திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. சந்தானத்துடன் ரித்திகா சென், யோகி பாபு, ராதா ரவி இணைந்து நடிக்கும் இப்படத்தை விஜய் ஆனந்த் இயக்க, விஜய் நாராயண் இசை அமைக்கிறார்.
ஆக்ஷன் மற்றும் காமெடி எண்டெர்டெய்னராக உருவாகும் இப்படத்தில் சந்தானம், யோகிபாபுவின் காம்போ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹேண்ட் மேட் மூவீஸ் மற்றும் 18 ரீல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் டகால்டி ஜனவரி 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
#DagaaltyFrom31stJanuary pic.twitter.com/kpJ2cONik4
— Vijay Anand (@vijayanans) January 10, 2020