KGF-ன் 2ம் அத்தியாயம் ஆரம்பம்..!- யார் இந்த அதிரா?
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 29, 2019 10:49 AM
கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று என்று பெருமையோடு அழைக்கப்படும் நடிகர் யாஷ் இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி இந்திய சினிமாவுலகில் பரவலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

அதுமட்டுமின்றி இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி கன்னட சினிமா வரலாற்றிலேயே ரூ 200 கோடிக்கும் மேல் வசூலித்து அதிக காலெக்க்ஷனை செய்த படம் என்ற சாதனையை செய்தது.
ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. கேஜிஎப் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியானது. அதாவது இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான சஞ்சய் தத் நடிக்க உள்ளார்
Tags : Kgf 2, Yash, Sanjay Dutt