www.garudabazaar.com
iTechUS

தளபதி 67 படத்தின் ஒன்லைன்.. கதை கேட்ட பின் சஞ்சய் தத் சொன்ன செம விஷயம்! வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் & லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 படத்தில் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளார்.

Sanjay Dutt About Thalapathy 67 Movie One Line Viral Poster

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | சொந்த ஊரில் புது வீடு கட்டும் நடிகை நீலிமா.. குடும்பத்துடன் வெளியிட்ட சூப்பர் PHOTOS!

நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது.

ராக்ஸ்டார் அனிருத், தளபதி 67 படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

Sanjay Dutt About Thalapathy 67 Movie One Line Viral Poster

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

Sanjay Dutt About Thalapathy 67 Movie One Line Viral Poster

Images are subject to © copyright to their respective owners.

நேற்று இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. KGF - 2 வில்லனாக நடித்த நடிகர் சஞ்சய் தத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இதுவாகும்.

Sanjay Dutt About Thalapathy 67 Movie One Line Viral Poster

Images are subject to © copyright to their respective owners.

இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரில், "நான் தளபதி 67 படத்தின் ஒருவரி கதையைக் கேட்ட போது, இதுதான் நான் நடிக்க வேண்டிய படம் என உணர்ந்தேன். இந்த படத்தில் நடிப்பது குறித்து ஆர்வமாக உள்ளேன்" என சஞ்சய் தத் கூறியதாக படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.

Also Read | "PARALLEL UNIVERSE".. தளபதி 67 படத்தை வாழ்த்திய கைதி தயாரிப்பாளர்.. TRENDING

தொடர்புடைய இணைப்புகள்

Sanjay Dutt About Thalapathy 67 Movie One Line Viral Poster

People looking for online information on Sanjay Dutt, Thalapathy 67, Thalapathy 67 Movie Update will find this news story useful.