Nenjuku Needhi

கார்த்தி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் …விருமன் Team வெளியிட்ட Exciting தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்தி நடிக்கும் விருமன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Karthi viruman movie first single release update

Also Read | கமல் நடிக்கும் "விக்ரம்" பட பெயரில் விற்பனைக்கு வந்த PERFUME! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

கொம்பனுக்குப் பின் விருமன்…

நடிகர் கார்த்தி திரைவாழ்வில் ‘பருத்திவீரன்’ திரைப்படத்திற்கு பிறகு கிராமத்து இளைஞனாக, நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் ‘கொம்பன்’.  இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி இருந்தார். இதையடுத்து சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கார்த்தி – முத்தையா கூட்டணி விருமன் படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு முன்பாக கார்த்தி நடித்த ‘கடைகுட்டி சிங்கம்’ திரைப்படத்தை 2D நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார். ‘மாநகரம்’ மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார்.

Karthi viruman movie first single release update

விருமன் படப்பிடிப்பு…

விருமன் படத்தின் படப்பிடிப்பு முன்னதாக மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் இந்த படத்தின் படபிடிப்பு 60 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த டிசம்பர் 21ம் தேதி முடைவடைந்த இந்த படப்பிடிப்பு குறித்து பேசியிருந்த நடிகர் கார்த்தி, நீண்ட நாட்களுக்கு பின் மதுரை மக்களை பார்த்து சந்தோஷமடைவதாக முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

Karthi viruman movie first single release update

முன்னணிக் கலைஞர்கள்…

விருமன் திரைப்படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அதிதி ஷங்கர் (அறிமுகம்), கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படமும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் கூடுதல் அம்சமாக இயக்குனர் ஷங்கரின் இளையமகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

Karthi viruman movie first single release update

கார்த்தி பிறந்தநாளில் விருமன் முதல் சிங்கிள்…

விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்துவரும் நிலையில் ரிலீஸ் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூவு கண்ணால என்ற பாடலின் ப்ரோமோ இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் வரும் மே 25 ஆம் தேதி கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த பாடல் முழுவதுமாக வெளியாக உள்ளது. இதைப் படத்தின் நாயகன் கார்த்தி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Also Read | விஷால் - சுனைனாவின் புதிய படம்.. வெளியான செம்ம ரிலீஸ் தேதி! போடு.. பண்டிகை தான்.!

தொடர்புடைய இணைப்புகள்

Karthi viruman movie first single release update

People looking for online information on Adithi Shankar, Karthi, Viruman Movie, Viruman Movie Single Song Release Updates will find this news story useful.