45 கிலோ எடையை ஜிம்மில் அசால்ட்டா தூக்கிய சமந்தா! ஒரு தடவை இல்ல அதுவும் 2 தடவை.. செம மாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹைத்ராபாத்: நடிகை சமந்தா கடுமையான எடை தூக்கும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது.

Actress Samantha Ruth Prabhu Gym Session with Her Trainer

சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்,  விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதிஜா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தற்போது தமிழில் இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார்.

Actress Samantha Ruth Prabhu Gym Session with Her Trainer

சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது.

Actress Samantha Ruth Prabhu Gym Session with Her Trainer

அவ்வப்போது சமூக வலைதளங்களில் முகம் காட்டும் சமந்தா, வீடியோக்கள், கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றுவார். மேலும் ரசிகர்களுடனும் கேள்வி பதில் கலந்துரையாடல் செய்வார். இந்நிலையில் எடை தூக்கும் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.

சமந்தாவின் ஜிம் பயிற்சியாளர் ஜூனைத் ஷேக் மேற்பார்வையில் 40 கிலோ எடையை இருமுறை சமந்தா தூக்கினார். இரண்டாம் முறை 40 கிலோ எடையை தூக்கும் போது மிகவும் சோர்வடைந்து விட்டார். 

Actress Samantha Ruth Prabhu Gym Session with Her Trainer

நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சமந்தா. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Actress Samantha Ruth Prabhu Gym Session with Her Trainer

People looking for online information on Gym, Samantha, Samantha GYM, Samantha ruth prabhu will find this news story useful.