"உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்.. சீக்கிரம் திரும்ப வா.." இன்ஸ்டாவில் எமோஷனல் ஆன சமந்தா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென் இந்திய சினிமாவில் தற்போது மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் சமந்தா.

Samantha insta story about her friend neeraja kona

கடைசியாக, இவரது நடிப்பில், "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

விக்னேஷ் சிவன் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில், சமந்தாவுடன், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

அடுத்தடுத்து படங்கள்..

இதற்கு முன்பாக, சமந்தா நடித்திருந்த ஓ பேபி, மஜிலி, சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 (வெப் சீரிஸ்) உள்ளிட்ட பல படைப்புகள், சமந்தாவிற்கு பெரிய அளவில் பெயரை பெற்றுக் கொடுத்திருந்தது. காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை தொடர்ந்து, ஷகுந்தலம், யசோதா, விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படம் என அடுத்தடுத்து பிசியாகி நடித்து வருகிறார் சமந்தா.

உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்..

பல திரைப்படங்களில், தீவிரமாக கவனம் செலுத்தி வரும் சமந்தா, தற்போது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று, அதிகம் வைரலாகி வருகிறது. மிகவும் பிரபலமான காஸ்ட்யூம் டிசைனர்களில் ஒருவர் தான் நீரஜா கோனா. அதே போல, அவர் நடிகை சமந்தாவின் நெருங்கிய தோழியும் கூட. சமீபத்தில் இவர் சமந்தாவின் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.

அப்போது, க்யூட்டான ஒன்றை நோட் ஒன்றை சமந்தாவின் வீட்டில் குறிப்பிட்டு சென்றுள்ளார். அதில், "பாப்பா, ஐ லவ் யூ. நீ மிகவும் அற்புதம் ஆனவள். அதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்" என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த நடிகை சமந்தா, நீரஜா கோனாவை டேக் செய்து, "நான் ஏற்கனவே உன்னை ரொம்ப மிஸ் செய்கிறேன். சீக்கிரமாக திரும்பி வா. இந்த க்யூட்டான குறிப்பிற்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.

இதனையும், தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் நீரஜா கோனா. சமந்தா மற்றும் நீரஜா ஆகிய இருவரும் தோழிகள் என்பது பல பேருக்கு தெரிந்தாலும், இந்த அளவுக்கு இணை பிரியாத தோழிகளா என வியப்புடன், ரசிகர்கள் பலரும் இணையத்தில் குறிப்பிட்டு வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

"உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்.. சீக்கிரம் திரும்ப வா.." இன்ஸ்டாவில் எமோஷனல் ஆன சமந்தா வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Samantha insta story about her friend neeraja kona

People looking for online information on Friendship, Neeraja Kona, Samantha will find this news story useful.