Samantha 96 ரீமேக் குறித்து விமர்சனங்களுக்கு பதில் - Trisha மாதிரி பண்ணா....
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 10, 2020 01:02 PM
தமிழில் விஜய் சேதுபதி - த்ரிஷா இணைந்து நடித்து கடந்த 2018 ஆம் வருடம் வெளியான '96' படம் தெலுங்கில் 'ஜானு' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதனை தமிழில் இயக்கிய பிரேம் குமாரே தெலுங்கிலும் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்து தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக சமந்தா கூறியுள்ளதாவது, இந்த படத்தில் த்ரிஷா செய்ய முயற்சிக்கக்கூடாது என்று நினைத்தேன். அது வேலைக்காகாது. ஜானு கம்பேரிஷனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது அல்ல. அது அனுபங்களை பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
Thankyou so much Avad... yes I felt it was important to not try and copy the most perfect performance @trishtrashers 🥰 .. wouldn’t work .. #Jaanu is not made for comparison only to share an experience that more people deserve to feel 🙏 https://t.co/YUUPOQiEq2
— Samantha Akkineni (@Samanthaprabhu2) January 10, 2020