"எப்போ குழந்தை பொறக்கும்...?" - ரசிகருக்கு டெலிவரி தேதியை சொன்ன சமந்தா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை சமந்தாவின் கர்ப்பம் குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர்களுக்கு தனக்கு எப்போது குழந்தை பிறக்கும் என குறிப்பிட்ட ஒரு தேதியை சமந்தா கூறியுள்ளார்.

Samantha answers to a fan's question on her Pregnancy

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகியோர் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமந்தாவின் கர்ப்பம் குறித்து அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி கேட்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சமீபத்தில் புனேவில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த சமந்தா, ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் வீடியோ வாயிலாக உரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர், “உங்களது குழந்தை எப்போது பிறக்கும்?” என கேட்டதற்கு, சற்றும் கோவிக்காமல் அதிரடியான பதிலை கொடுத்தார் சமந்தா. “எனது உடல்நிலை பற்றி கவலை கொள்பவர்களுக்கு, எனக்கு குழந்தை எப்போது பிறக்கும் என்றால் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலை 7 மணிக்கு பிறக்கும்” என பதில் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடிகர் நாகசைதன்யா மற்றும் சமந்தா ஆகியோர் தங்களது செல்ல பிராணியான நாய்க்குட்டியின் முதல் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். ஹாஷ் அக்கினேனி என பெயரிடப்பட்டுள்ள நாய்க்குட்டியின் பிறந்தநாளை அக்கம்பக்கத்தினருடன் கேக் வெட்டி கோலாகலமாக நடிகை சமந்தா கொண்டாடினார். அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.