www.garudabazaar.com

RRR நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய KGF யஷ் மகன் 😍 செம்ம வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாட்டு நாட்டு பாடலுக்கு நடிகர் யஷ் மகன் நடனம் ஆடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

KGF Actor Yash Son Dancing RRR Naatu Naatu song

Images are subject to © copyright to their respective owners.

Also Read | லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள்.. LEO ஷூட்டிங்கில் கொண்டாட்டம் 😍.. வைரல் போட்டோஸ்!

RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர்.

KGF Actor Yash Son Dancing RRR Naatu Naatu song

Images are subject to © copyright to their respective owners.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது.

RRR படம் உலகம் முழுவதும் 1100 கோடி ரூபாய்க்கும் மேல்  வசூலாக ஈட்டியது. ஒடிடியில் இந்த படம் வெளியான பிறகும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

KGF Actor Yash Son Dancing RRR Naatu Naatu song

Images are subject to © copyright to their respective owners.

ஆஸ்கார் விருது விழா இந்திய நேரப்படி நேற்று அதிகாலை மார்ச் மாதம் 13 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விருது விழாவில் ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர்,  நடிகர் ராம் சரண், அவரது மனைவி உபசன்னாவும் கலந்து கொண்டனர்.

இதில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றுள்ளது. இசையமைப்பாளர் கீரவாணி & பாடலாசிரியர் சந்திரபோஸ் விருதை பெற்றுக் கொண்டனர்.

KGF Actor Yash Son Dancing RRR Naatu Naatu song

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் யஷ் மகன் RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகின்றன. யஷ் மகனின் பிறந்தநாள் விழாவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

யஷ், கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகை ராதிகா பண்டித்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐரா என்ற மகளும், யாதர்வ் என்ற மகனும் உள்ளனர்.

Also Read | LEO லோகேஷ்-க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சஞ்சய் தத் & மலையாள வில்லன் நடிகர்.. TRENDING

RRR நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய KGF யஷ் மகன் 😍 செம்ம வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

KGF Actor Yash Son Dancing RRR Naatu Naatu song

People looking for online information on KGF Actor, RRR, RRR Naatu Naatu song, Yash will find this news story useful.