www.garudabazaar.com

The Elephant Whisperers : நீலகிரி டூ ஆஸ்கார் பயணம்..! ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஆஸ்கார் விருது வழங்கும் விழா தொடங்கியது.

kartiki gonsalves Oscars Winner The Elephant Whisperers Documentary Short

Images are subjected to © Copyrights to their respective Owners.

Also Read | Naatu Naatu : 'நாட்டு நாட்டு' ஆஸ்கார் விருது .. RRR நடிகர் ராம் சரண் சொன்னது என்ன?!   

இந்நிலையில் இந்த 95வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஆஸ்கார் விருது வென்ற தமிழ் ஆவண குறும்படம் The Elephant Whisperers தற்போது பேசுபொருளாகியுள்ளது. முதுமலையில் தயாரான ‘The Elephant Whisperers' சிறந்த ஆவண குறும்பட பிரிவில் இப்படம் ஆஸ்கார் விருது வென்றுள்ளது.

ஆம், தமிழகத்தின் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி தம்பதி குறித்தும், அவர்களுக்கு யானையுடனான உறவு குறித்தும் உருக்கமாக இந்த ஆவணப்படத்தை இயக்கியிருந்தார் கார்த்திகி கொன்சால்வ்ஸ். இந்த ஆவணப்படத்தை தயாரித்திருந்தார் குனீத் மோங்கா. நெட்பிளிக்ஸ் ஆவணப்படமான இப்படம் 41 நிமிடங்கள் ஒளிபரப்பாகக் கூடியது.

kartiki gonsalves Oscars Winner The Elephant Whisperers Documentary Short

Images are subjected to © Copyrights to their respective Owners.

இதில் பொம்மன் என்பவர் தமிழ்நாட்டில் உள்ள தெப்பாக்காட்டில் வனத்துறையினரின் கண்காணிப்பில் குட்டி யானைகளை பராமரிக்கும் பணியில் உள்ளார்.  எதிர்பாராத விதமாக தாய் யானை மின் விபத்தில் உயிரிழக்க, இத்தகைய ஆபத்தான சூழலில் எஞ்சியிருந்த குட்டி யானையான ரகுவை பொம்மன் வளர்க்க நேர்கிறது. பொம்மனும் அவருக்கு உதவியாக இருக்கும் பெள்ளியும் சேர்ந்து ரகுவை மீட்டெடுக்கும் அவர்களின் வாழ்வியல் இயற்கைக்கும் மனிதர்களுக்குமான உறவைச் சொல்லும் ஆவணக்குறும்படம் ஆகும்.

இந்த ஆவணக்குறும்படத்துக்கான ஆஸ்கார் விருதுடன் பேசிய இப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ், பழங்குடி மக்களையும் விலங்குகளையும் முன்னிலைப்படுத்திய தங்களது இந்த படத்தை அங்கீகரித்தமைக்காக அகாடமிக்கு நன்றி தெரிவித்ததுடன், நம் தாய் நாடான இந்தியாவுக்கு இவ்விருதை சமர்ப்பித்துள்ளார். 

kartiki gonsalves Oscars Winner The Elephant Whisperers Documentary Short

Images are subjected to © Copyrights to their respective Owners.

இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் நீலகிரியில் பிறந்து, அங்கு கல்லூரி பயின்றவர், பிறகு ஒரு புகைப்பட பத்திரிகையாளராக தன் பயணத்தைத் தொடங்கியவர், காட்டு விலங்குகள் சார்ந்து, சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கினார். அப்படி பொறுமை மற்றும் வேட்கையுடன் விலங்குகள் மற்றும் மனிதர்கள் நிலவும் நிலத்தின் எதார்த்த தருணங்களையே இப்படி படமாக்கியிருக்கிறார்.

Also Read | RRR நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய KGF யஷ் மகன் 😍 செம்ம வீடியோ

kartiki gonsalves Oscars Winner The Elephant Whisperers Documentary Short

People looking for online information on Kartiki gonsalves, Oscars 2023, The Elephant Whisperers will find this news story useful.