"கொஞ்சம் கஷ்டமா இருந்தது".. சகுந்தலம் படம் குறித்த நடிகை சமந்தாவின் வைரல் பதிவு!
முகப்பு > சினிமா செய்திகள்சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.
விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார்.
சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்.
சமந்தா, தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா', "குஷி' படங்களில் தற்போது நடித்து வருகிறார். நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார் நடிகை சமந்தா.
சமீபத்தில் நடிகை சமந்தா நடித்த யசோதா படம் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார்.
தற்போது சமந்தா கதாநாயகியாக நடிக்க “சகுந்தலம்” திரைப்படம் உருவாகி வருகிறது. பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.
சகுந்தலம் திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் எழுதி இயக்குகிறார்.இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்க, சேகர் V ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார், சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார்.
Gunaa DRP - Teamworks சார்பில் நீலிமா குணா, இப்படத்தை தயாரிக்கிறார். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, சகுந்தலம் படத்தை வழங்குகிறார்.
இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும்
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜீனின் மகள் அல்லு அர்ஹா இந்த படத்தில் அறிமுகமாக உள்ளார்.
இந்த படம் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி திரையரங்குகளில் தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா, தனது நாயினுடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டு, "சகுந்தலம் படப்பிடிப்பில் கடினமான பகுதி எதுவென்றால் நடக்கும்போதும், பேசும்போதும், ஓடும்போதும்...அழுகையிலும் கூட அழகையும் தோரணையையும் பேணுவதுதான்! தோரணை என்பது என்னுடைய விஷயம் அல்ல 😂 அதற்காக பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது!
அங்கே சாஷாவை (வளர்ப்பு நாய்) அழைத்துச் சென்றிருக்க வேண்டும்... இது அவளது விஷயம் அல்லவே!" என சமந்தா பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Samantha Started Shaakunthalam Movie Dubbing
- Samantha Shaakunthalam Movie Release Date Announced
- Samantha Ruth Prabhu New Year 2023 Wishes To Fans
- Yashoda To Stream In OTT From Dec 9 Starring Samantha
- Allu Arjun Daughter Allu Arha Act With Samantha Deets
- Samantha Yashoda Movie USA Box Office Collection
- Samantha Latest Instagram Post About Yashoda Movie Release
- Samantha Yashoda Movie Promotion Photoshoot Viral Photos
- Viral Response To Samantha From Naga Chaitanya Family
- Samantha Diagnosed Auto Immune Condition Called Myositis
- Samantha Ruth Prabhu Starring Yashoda Movie Official Trailer
- Samantha Ruth Prabhu Yashoda Movie Release Date Announced
தொடர்புடைய இணைப்புகள்
- കണ്ണനെ Video-ൽ കാണിക്കാൻ ആദ്യം പേടിയായിരുന്നു | Inspiring Story
- കണ്ണനെ വച്ച് Cash ഉണ്ടാക്കുന്നു എന്ന് പറഞ്ഞവർ തന്നെ അവനോട് വന്ന് മാപ്പ് പറഞ്ഞു | Inspiring Story
- Samantha-வ யாராலும் தடுக்க முடியாது 🔥 Yashoda Making Video 👊🏽 BTS
- "അന്ന് Pocket Money മൊത്തം Munch വാങ്ങി കഴിക്കാൻ എടുക്കും" 😅😅 | Samantha Shares Childhood Memories
- ദിവസവും എനിക്ക് Munch കഴിക്കണം😍😍 | തൻ്റെ കുട്ടികാലത്തെ ഓർമ്മകൾ പങ്കുവച്ച് Samantha
- നടി സമാന്തയ്ക്ക് വന്ന Myositis അപകടകാരിയോ ?😲😲 അത് എത്രത്തോളം നമ്മുടെ Health-നെ ബാധിക്കും ?
- 'சமந்தாவை பாதித்த Myositis..!'அந்த அரிய நோயின் அறிகுறிகள் என்ன.?முன்கூட்டியே கண்டறிவது எப்படி?
- 'வாடகை தாயாக சமந்தா..!'சூர்யா வெளியிட்ட விறுவிறு டிரெய்லர் வீடியோ..கொண்டாடும் ரசிகர்கள்
- AMALA: Item Dance பத்தி என்ன சொல்றது? அதை பத்தி கேட்காதீங்க... எனக்கும் கோபம் வரும் - EXCL Interview
- Kiss 😘கொடுத்த Shalu Shamu💖Imitates Samantha😍Oo Solriya Dance With KPY Bala🤩
- "Husband-னு சொல்லாதீங்க, Ex Husband-னு சொல்லுங்க"- Open-ஆ சொன்ன Samantha
- Samantha & I Had The Best LOVE Stories Ever ❤ஆமா Good Friends தான்😍 Naga Chaitanya Special Interview