திருப்பதி ஏழுமலையானை நடந்தே சென்று வழிபட்ட சமந்தா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா கீழே இருந்து மேல் திருப்பதிக்கு நடந்தே சென்ற தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.

Samantha visits Tirumala Devasthanam on foot ahead of her Majili release

சென்னையைச் சேர்ந்த கிறிஸ்தவ பெண்ணான நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்கு பின் கணவரின் மதத்தையும் தீவிரமாக பின் பற்றி வரும் நடிகை சமந்தா அவ்வப்போது திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்வார்.

இந்நிலையில், சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதுடன், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து தெலுங்கில் திருமணத்துக்கு பின் கணவர் நாகசைதன்யாவுடன் சமந்தா ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘மஜிலி’ திரைப்படம் வரும் ஏப்.5ம் தேதில் ரிலீசகாவுள்ளது.

‘சூப்பர் டீலக்ஸ்’ வெற்றிக்கு நன்றி தெரிவிக்கவும், ‘மஜிலி’ திரைப்படம் வெற்றிபெற வேண்டியும் நடிகை சமந்தா, கீழிருந்து மேல் திருப்பதி வரை சுமார் 8 கி.மீ வரை நடந்தே சென்று ஏழுமையானை நடந்தே சென்று வழிபாடு செய்துள்ளார்.