சல்மான் கான் தொகுத்து வழங்கும் 13வது சீசன் பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 23, 2019 05:01 PM
தமிழ் பிக்பாஸ் சீசன் 3 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் அந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிடும். இந்த போட்டியில் ஜெய்க்கப்போவது யார் என்று அப்போது தெரிந்து விடும்.
![Salman Khan's Bigg Boss 13 house Details is here Salman Khan's Bigg Boss 13 house Details is here](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/salman-khans-bigg-boss-13-house-details-is-here-photos-pictures-stills.jpg)
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் மூன்று சீசன்களாக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழை போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றுவருகிறது. தெலுங்கில் நாகர்ஜுனா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
மலையாளத்தில் இன்னும் சிறிதுநாட்களில் நடைபெறும். அதன் ஒரு பகுதியாக ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி 12 சீசன்களாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 13 சீசன் வருகிற செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது.
இதனை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கவிருக்கிறார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் உள் அறைகளை அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் கலர்ஸ் டிவி தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளது. இந்த வீட்டை பாலிவுட் கலை இயக்குநர் ஓமங் குமார் வடிவமைத்துள்ளார்.
Yaha hoga saara drama aur tedhapan because yeh hai @BiggBoss ka naya ghar 😍 @BeingSalmanKhan @Vivo_India #BiggBoss13 #BiggBoss #BB13 #SalmanKhan pic.twitter.com/qIHPb7xs2Q
— COLORS (@ColorsTV) September 23, 2019