பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

சமீபத்தில் இவர் சிலம்பம் சுற்றிய வீடியோ மிகவும் பிரபலமான நிலையில், தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டிக்டாக் புகழ் அக்ஷய் பார்த்தாவுடன் வாத்தி ஸ்டெப் சேலஞ்சுக்காக மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு சாக்ஷி நடனமாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags : Sakshi Agarwal