'தயவுசெஞ்சு இப்படி பண்ணாதீங்க' - கவின் - லாஸ்லியா குறித்து வீடியோ மூலம் சாக்ஷி உருக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 27, 2019 12:33 PM
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தான் ஏன் வெற்றி பெறுவோம் என்பதை சொல்ல வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அப்போது பேசிய கவின், தான் எல்லோரிடமும் நட்புடன் பழகுவதாகவும அவர்களுக்கு எப்பொழுதும் துணை நின்றதாகவும் கூறினார். அப்போது வனிதா சாக்ஷி உன் ஃபிரெண்ட் தான. அவரிடம் ஏன் அப்படி ரியாக்ட் செய்தாய் என்று கேட்டார். அதற்கு கவின் நட்பையும் தாண்டி ஒரு கட்டத்தில் அவர் என்னை பயன்படுத்திக்கொள்கிறாரோ என்று தோன்றியது என்று கூறினார்.
இந்நிலையில் இது குறித்து சாக்ஷி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கவின் எனக்கு propose பண்ணாங்களா? அல்லது நான் கவினுக்கு Propose பண்ணேனா என்ற கேள்விக்கு பதில் வேணும். என்கிட்ட சாவடிச்சுடுவேன்லா சொன்னாங்க.
இதே உரிமையோட மதுகிட்ட சொல்ல முடியுமா? நான் கேம் ஆடுறேனா ? அவங்க தான் என்ன வச்சு கேம் ஆடுறாங்க. கவின், ஷெரின் கிட்ட கூட சாக்ஷி நம்ம வீட்ல தான் இருப்பாங்கனுலா சொன்னாங்க. இனிமே இந்த மாதிரி குற்றச்சாட்டு சொல்லாதீங்க ப்ளீல் என்று பேசியுள்ளார்.
'தயவுசெஞ்சு இப்படி பண்ணாதீங்க' - கவின் - லாஸ்லியா குறித்து வீடியோ மூலம் சாக்ஷி உருக்கம் வீடியோ