www.garudabazaar.com
iTechUS

Naan Kadavul Illai: இயக்குநர் SAC குறித்து பிரபல பிக்பாஸ் நடிகை நெகிழ்ச்சி பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகர் குறித்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் பதிவிட்டுள்ளார்.

Sakshi Agarwal about S A Chandrasekhar Naan Kadavul illai

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் ‘தளபதி’ என்ற அடையாளத்துடன் வலம் வரும் முன்னணி ஹீரோ.  இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபல இயக்குனராக விஜய்யின் பல திரைப்படங்களை தொடக்க காலத்தில் இயக்கியவர். விஜய்யை வைத்து படம் இயக்கும் முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் படங்களை இயக்கியுள்ளார்.

Sakshi Agarwal about S A Chandrasekhar Naan Kadavul illai

மேலும் தமிழ் அல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பல முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவரது மனைவி ஷோபா சந்திரசேகர், பின்னணி பாடகியாக, நடிகர் விஜய்யுடன் இணைந்து பாடிய பாடல்கள் உட்பட பல பாடல்களை பாடியுள்ளார். தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்.

கடைசியாக 'மாநாடு' படத்தில் சிம்புவுடன் 'அறிவழகன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது 'நான் கடவுள் இல்லை' என்ற படத்தை சந்திர சேகர் இயக்கி உள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sakshi Agarwal about S A Chandrasekhar Naan Kadavul illai

சிபி சிஐடி அதிகாரியாக சமுத்திரகனி நடித்துள்ளார். இனியா, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில் இவர்களுடன்  வில்லனாக பிக்பாஸ் சரவணன் நடித்துள்ளார். நடிகை ரேணுகா, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் சந்திரசேகர் குறித்து, "உங்களுடன் பணிபுரிந்தது மிகவும் அற்புதமான அனுபவம் சார். நான் உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன், நீங்கள் ஒவ்வொரு நாளும் எங்களை ஊக்கப்படுத்துகிறீர்கள். சினிமா மீதான உங்களின் தீராத ஆர்வமும் காதலும் மிகவும் அருமை. உங்களுடன் பணியாற்றுவது ஆசீர்வதிக்கப்பட்டது சார், நீங்கள் அடைந்த அனுபவம், வெற்றி  பாராட்டத்தக்கது.  நீங்கள் மிகவும் எளிமையாக இருப்பது நெகிழ்ச்சியாக உள்ளது.

.

இந்த படத்தில் எனது கதாபாத்திரத்திற்காக நான் பெறும் பாராட்டுக்களால் மிகவும் தாழ்மையுடன் உணர்கிறேன். அனைத்து புகழும் உங்களுக்கே சேரும் சார் 🙏🙏🙏இன்னும் 1 நாள் நான்கடவுள் இல்லை . படத்தினை தியேட்டர்களில் பாருங்கள்" என சாக்ஷி அகர்வால் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Sakshi Agarwal about S A Chandrasekhar Naan Kadavul illai

People looking for online information on SA Chandrasekhar, Sakshi Agarwal, Vijay will find this news story useful.