www.garudabazaar.com
iTechUS

Bharathi Kannamma : பாரதி கண்ணம்மா கல்யாண வைபோகத்தில் கடைசி நேர பரபரப்பு ட்விஸ்ட்.. ப்ரோமோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு குடும்பத்தினரையும், கண்ணம்மா உட்பட யாரையும் அண்மையில் அடையாளம் தெரியாமல் போனது.

Bharathi Kannamma last minute twist in marriage

                                  Image Credit : vijay television

Also Read | ‘வாரிசு’ படத்தை தொடர்ந்து மீண்டும் பிஸியான ஷாம் .. அடுத்ததாக இணையும் பிரபல இயக்குநர் இவரா?

அதன் பின்னர் மருத்துவர் பாரதியின் ஆழ்மனதில் கண்ணம்மா பெயர் ஆழமாக பதிந்திருக்கிறது, ஆனால் கண்ணம்மாவை நேரில் பார்க்கும்போது அவருக்கு யார் என்று தெரியவில்லை, எனினும் பாரதிக்கு பழைய நினைவுகள் வரவேண்டும் என்றால் கண்ணம்மா தான் உதவி செய்ய வேண்டும் மீண்டும், அவர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும், கண்ணம்மா பாரதியுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். முடிந்தால் பாரதியின் பழைய நாட்களுக்கு, அதாவது கண்ணம்மாவை பாரதி காதலித்த நாட்களுக்கு சென்று பழைய காட்சிகளை மீண்டும் ரீகிரியேட் செய்தால், பாரதியின் பழைய எல்லா நினைவுகளும் அவருக்கு நினைவுக்கு கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என கூற அதற்கு கண்ணம்மாவோ தன்னால் முடியாது என முதலில் கூறுகிறார்.

Bharathi Kannamma last minute twist in marriage

Image Credit : vijay television

பிறகு அனைவரும் கெஞ்சியதால் இதற்கு சம்மதித்த கண்ணம்மா பாரதிக்கு பழைய நினைவுகளை கொண்டு வருவதற்காக பழைய நாட்களில் இருந்தது போலவே பாவாடை தாவணி கட்டிக்கொண்டு, சில பெண்களுடன் குளத்தங்கரையில் உள்ள படிக்கட்டுகளில் கையில் விளக்குகளை ஏந்தி கொண்டு படிக்கட்டுகளில் இறங்கி வந்து குளத்தில் விளக்குகளை விடுகிறார். அந்த ஆற்றங்கரை படிக்கட்டில் பாரதி அமர்ந்திருக்கிறார். கண்ணம்மா விளக்கை குளத்தில் விட்டு விட்டு படிக்கட்டு ஏறி வரும்போது பாரதி கண்ணம்மாவை பார்க்கிறார்.

Bharathi Kannamma last minute twist in marriage

Image Credit : vijay television

கண்ணம்மாவும் பாரதியை பார்க்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் குளக்கரையில் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். இதனை தொடர்ந்து பாரதிக்கு அனைத்தும் நினைவுக்கு வருகிறது. ஆனாலும் கண்ணம்மாவின் மனம் மாறுவதற்காக அனைவரும் காத்திருந்தனர். ஒரு வழியாக மீண்டு வந்த பாரதியை கண்ணம்மா ஏற்றுக்கொண்டு தானும் அவருடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்ததை அடுத்து, விவாகரத்தான இவர்களுக்கு திரும்பவும் திருமணம் செய்ய அனைவரும் ஆலோசிக்கின்றனர். இதற்கு பாரதி & கண்ணம்மா இருவருமே சம்மதிக்கின்றனர்.

Bharathi Kannamma last minute twist in marriage

Image Credit : vijay television

இதனிடையே இந்த திருமண நிகழ்ச்சியில் பிரபலங்களான நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, பிக்பாஸ் சினேகன், சீரியல் நடிகை கன்னிகா, பிக்பாஸ் 6வது சீசனில் புகழ்பெற்ற ஷிவின் கணேசன், பிக்பாஸ் முந்தைய சீசன் போட்டியாளரும் பாரதி கண்ணம்மாவில் ஒரு கேரக்டருமான தாமரை செல்வி ஆகியோர் கலந்து கொள்ளும் ப்ரோமோ வெளியானது.

Bharathi Kannamma last minute twist in marriage

Image Credit : vijay television

இந்நிலையில்தான் பாரதி கண்ணம்மாவுகாக தறியில் அமர்ந்து கல்யாண புடவையை நெய்து பரிசாக கொடுக்கிறார். அதில் கண்ணம்மா எனும் பெயர் இடம்பெற்றுள்ளது. இதேபோல், கடைசி நிமிடத்தில் தாலி காணாமல் போகிறது, தாலியை காணவில்லை என்பதால் கல்யாண வீடே ஸ்தம்பிக்கிறது. தாமரையும் தாலியை எங்கெங்கேயோ தேடிப்பார்க்கிறார். பாரதியின் அம்மா உட்பட அனைவருமே அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் அப்போது கண்ணம்மாவின் அம்மாவின் தாலியை எடுத்துக்கொடுக்கும் பாரதி, கண்ணம்மாவுக்கு இதைவிட பெரிய பரிசு இருக்க முடியாது என கூறி நெகிழவைக்கிறார்.

Also Read | Cool Suresh : “தமிழ்நாட்டுக்கு 3 தளபதி.. 2 சூப்பர் ஸ்டார்.. கமெண்ட்ல திட்டுறவங்க கூகுள்ல போய் பாருங்க”! - கூல் சுரேஷ்.

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi Kannamma last minute twist in marriage

People looking for online information on Bharathi Kannamma, Bharathi Kannamma New Promo, Bharathi Kannamma Serial Today, Bharathi Kannamma Sertial today episode, Bharathi Kannamma Sertial today Promo will find this news story useful.