o2

‘கார்கி’ படத்தின் முக்கிய அப்டேட்… சாய்பல்லவி வெளியிட்ட மேக்கிங் வீடியோ துணுக்கு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சாய்பல்லவி நடிக்கும் கார்கி படத்தின் முக்கிய அப்டெட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sai pallavi gargy movie major announcement tomorrow

Also Read | ஜெண்டில்மேன் 2 படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற கலை இயக்குனர்…. வெளியான லேட்டஸ்ட் தகவல்

சாய்பல்லவி

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் சாய்பல்லவி. அதற்கு முன்பாக ’உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நடன நிகழ்ச்சியிலும் மற்றும் தாம்தூம் படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்திருந்தார். ஆனால் பிரேமம் திரைப்படம் அவரை தென்னிந்திய மொழி ரசிகர்கள் மத்தியில் சாய்பல்லவியை பிரபலமாக்கியது. அதையடுத்து வரிசையாக முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். அவருடைய நடிப்பு, சிரிப்பு, ஹேர் ஸ்டைல், டான்ஸ் என பலவற்றுக்காகவும் அவரை பிடித்திருந்தாலும் சில குறிப்பிட்ட ரசிகர்களுக்கு சாய் பல்லவியின் கன்னத்தில் இருக்கும் முகப்பருக்கள் ஸ்பெஷலானவையாகவே குறிப்பிட்டு பிடிக்கும் என்று சொல்வதை கேட்டிருக்கிறோம்.

கார்கி

சமீபத்தில் சாய்பல்லவி, நானியுடன் நடித்த ஷ்யாம் சிங்காராய் படமும், அதில் சாய் பல்லவியின் நடிப்பும் பாராட்டுகளைப் பெற்றன. இந்நிலையில் சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் உருவாகும் ’கார்கி’ என்ற படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.  சாய்பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இந்த போஸ்டரை வெளியிட்டனர். இந்த படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். 96 மற்றும் ஜெய்பீம் படப்புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படம் சாய்பல்லவி பற்றிய தன்னுடைய பதிவில் “ நான் சில மாதங்களாக இந்த படத்தைப் பற்றி பேசவேண்டும் என காத்திருந்தேன். கடைசியில் என் பிறந்தநாளில், எங்களின் படக்குழு படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். உங்களிடம் ‘கார்கி’ யை அறிவிக்கிறோம்” எனக் கூறியிருந்தார்.

Sai pallavi gargy movie major announcement tomorrow

சாய்பல்லவி பகிர்ந்த வீடியோ

இந்நிலையில் தற்போது சாய்பல்லவி பகிர்ந்துள்ள புதிய வீடியோவில் “கார்கி” படத்தின் ஒரு காட்சி எடுக்கப்படும் துணுக்கு அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார். வீடியோவின் இறுதியில் ‘நாளை முக்கியமான அறிவிப்பு’ வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த வீடியோவோடு சாய்பல்லவி “மிகவும் ஆவலாக நாளை அறிவிப்புக்காக காத்திருப்பதாக” தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Also Read | நகைச்சுவை நடிகர் செந்தில் மகனை பாத்துருக்கீங்களா.. ? பாபி சிம்ஹா படத்துல அறிமுகமாகிறார்.!.

 

தொடர்புடைய இணைப்புகள்

Sai pallavi gargy movie major announcement tomorrow

People looking for online information on Gargy movie, Gargy movie updates, Sai Pallavi will find this news story useful.