Viruman Logo Top
Kaateri logo top
www.garudabazaar.com

பிரபல OTT-யில் கார்கி.. சாய் பல்லவி வெளியிட்ட உருக்கமான நெகிழ்ச்சி பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்கி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து சாய் பல்லவி நெகிழ்ச்சியான பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.

Sai Pallavi Latest Post about Gargi Sony Liv OTT Release

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் சாய்பல்லவி நடித்த ’கார்கி’ படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். 96 படப்புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Sai Pallavi Latest Post about Gargi Sony Liv OTT Release

கார்கி படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி கைப்பற்றியது. இந்த படத்தினை சூர்யா ஜோதிகா தம்பதியர் தங்களது 2டி நிறுவனம் மூலம் வழங்கினர்.

கடந்த ஜூலை 15 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பள்ளி ஆசிரியராக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் காளி வெங்கட், சரவணன், ஐஸ்வர்யா லெஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஒடிடி  ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனமான சோனி லிவ் கைப்பற்றி உள்ளது.

Sai Pallavi Latest Post about Gargi Sony Liv OTT Release

ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் கார்கி திரைப்படம் சோனி லிவ் தளத்தில் ஒளிபரப்பாகும். இதற்கான அறிவிப்பு டிரெய்லரை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

இது குறித்து சாய் பல்லவி நெகிழ்ச்சியான பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைத்து படக்குழு உறுப்பினர்களையும் குறிப்பிட்டு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.

"கடந்த சில வாரங்கள் மாயாஜாலத்திற்குக் குறைவில்லை, இப்போது #Gargi "Sony Liv" இல் ஆகஸ்ட் 12 அன்று ஒரு பெரிய பார்வையாளர்களை அடைந்தது. இதை நம் அனைவருக்கும் மறக்கமுடியாததாக மாற்றிய இந்த திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள குழுவிற்கு நன்றி! கடின உழைப்பாளி கூட்டம்!" என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sai Pallavi Latest Post about Gargi Sony Liv OTT Release

People looking for online information on GARGI, Sai Pallavi will find this news story useful.