ஓநாயாக டூப் பொம்மை.. நிஜ குரங்குகளின் கையில் சிக்கிய சம்பவம்.. ஷூட்டிங் பரிதாபங்கள்.!
முகப்பு > சினிமா செய்திகள்மலபார் போலீஸ் படத்தில் ஒரு இரவு முழுவதும் கவுண்டமணியை நாய் ஒன்று அரெஸ்ட் பண்ணி வைத்திருக்கும். இதேபோல் தற்போது உருவாகி வரும் கெஸ்ட் -2 படத்தில் ஓநாய்க்காக செய்யப்பட்ட பொம்மையை நிஜ குரங்குகள் அரெஸ்ட் பண்ணி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
Also Read | 'களவாணி' பட நடிகையின் IAS கனவு .. உதவ முன்வந்த ஜெய்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க..
குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் D.கோகுலகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெஸ்ட் ; சாப்டர்-2’. ரங்கா புவனேஷ்வர் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் குமார், விது பாலாஜி ஆகியோர் நடிக்க கதாநாயகியாக சாக்ஷி அகர்வாலும், முக்கிய வேடத்தில் ஜாங்கிரி மதுமிதாவும் நடித்துள்ளனர்.
ஓநாய் மனிதன் என்கிற கதைக்களம் இந்திய சினிமாவிலேயே முதல்முறையாக இப்போதுதான் முழுமையாகக் கையாளப்படுகிறது. இதற்கு முன்னதாக இந்தியில் எழுபதுகளின் காலகட்டத்தில் ஒன்றிரண்டு படங்கள் வந்திருந்தாலும் அவற்றில் ஓநாய் மனிதன் என்கிற உருவத்தை அந்த காலகட்டத்திற்கு ஏற்ப சாதாரணமாகவே கையாண்டு இருந்தார்கள். ஆனால் இந்த படத்தில் ஓநாய் மனிதன் உருவாக்கத்தில் VFX தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது.
இந்த படத்தை இயக்கியுள்ள ரங்கா புவனேஷ்வர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான "ஆறாவது வனம்" என்கிற படத்தை இயக்கியவர். அதன்பிறகு மலையாள திரையுலகிற்கு சென்று அங்கே இரண்டு படங்களை இயக்கியவர், அதன் பின்னர் தமிழ், தெலுங்கு என இருமொழிப் படம் ஒன்றையும் இயக்கி உள்ளார். விரைவில் அந்த படம் ரிலீசாக இருக்கிறது.
இந்த நிலையில் மீண்டும் தமிழுக்கு வந்துள்ள ரங்கா புவனேஷ்வர் அனிமல் திரில்லர் என்கிற ஜானரில் ஓநாய் மனிதன் என்கிற வித்தியாசமான கதைக்களத்தில் இந்த "கெஸ்ட்" படத்தை இயக்கியுள்ளார். இப்படம் குறித்து இயக்குநர் பேசும்போது, “படத்தின் கதையே இந்த நால்வரை சுற்றித்தான் பின்னப்பட்டுள்ளது. இந்த நான்கு பேரில் ஒருவர்தான் ஓநாய் மனிதராக மாறுகிறார்.. அது யார் ? எதற்காக ஓநாய் மனிதராக மாறுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக டம்மியாக ஓநாய் உருவத்தில் பொம்மைகள் செய்து வைத்திருந்தோம். அப்படி ஒரு பொம்மையை வைத்து விட்டு மறைவாக நின்று படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது எங்கிருந்தோ திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் அங்கே படையெடுத்து வந்து அந்த ஓநாய் பொம்மையை இழுத்துச்சென்று கடித்து குதறி சின்னாபின்னப் படுத்தி விட்டன. அதற்கு முன்னதாக அவைகள் ஓநாய் என்கிற மிருகத்தை அந்த காட்டிலே பார்த்தது இல்லை என்பதுதான் இதற்குக் காரணம்.
அதனால் அடுத்த நாளிலிருந்து விகாரமான பயமுறுத்தும் தோற்றம் கொண்ட சோளக்கொல்லை பொம்மை கொன்றை மரத்தில் கட்டி வைத்து விட்டு அதன்பின் ஓநாய் பொம்மையை வைத்து படப்பிடிப்பு நடத்தியபோது குரங்குகளின் தொல்லை ஏற்படவில்லை. எங்களது இந்த டெக்னிக்கை பார்த்து வன அதிகாரிகளே வியந்துபோய் பாராட்டினார்கள்” என்று கூறியுள்ளார் இயக்குநர் ரங்கா புவனேஷ்வர்.
Also Read | ஓநாய் மனிதனிடம் ‘கெஸ்ட்’ ஆக சிக்கும் BiggBoss நடிகை.! இப்படி ஒரு த்ரில்லர் படமா.?