www.garudabazaar.com
iTechUS

Varisu : "12 வருச காத்திருப்பு.. 139-வது படத்துல நடந்துருக்கு".. வாரிசு குறித்து நெகிழ்ந்த தமன் Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் கடந்த (11.01.2023) அன்று வெளியாகி உள்ளது.

S Thaman About Varisu Music Director Chance 12 years waiting

11 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

S Thaman About Varisu Music Director Chance 12 years waiting

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியானது.

வாரிசு படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார்.

மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார். சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார்.

மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் வாரிசு  இசையமைப்பாளர் தமன் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டியில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். தமன் கூறியதாவது- "வாரிசு எனக்கு 139-வது படம். 138 படம் முடிந்து விஜய் சார் பட வாய்ப்பு வந்திருக்கிறது.  2008 ஈரம் படத்தில் இருந்து 12 வருசமா காத்திருக்கேன் இந்த வாய்ப்புக்காக. இதுக்கு நடுவுல பட்ட கஷ்டங்கள். இந்த 12 வருசத்துல விஜய் சாரை 3 முறை சந்திச்சு இருக்கேன். அவர் என் மேல் வச்ச நம்பிக்கை. இதெல்லாம் தான் வாரிசு ". என இசையமைப்பாளர் தமன் நெகிழ்ச்சியாக கூறினார்.

VARISU : "12 வருச காத்திருப்பு.. 139-வது படத்துல நடந்துருக்கு".. வாரிசு குறித்து நெகிழ்ந்த தமன் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

S Thaman About Varisu Music Director Chance 12 years waiting

People looking for online information on S Thaman, Varisu, Vijay will find this news story useful.