www.garudabazaar.com

அட.. நம்ம "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தனம் .. அரபிக் குத்து பாட்டுக்கு போட்ட வேற லெவல் ஆட்டம்.. வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: பீஸ்ட் அரபிக்குத்து பாடலுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா தனுஷ் ஆடிய நடனம் வைரலாகி உள்ளது.

sujitha dhanush dancing for beast arabic kuthu song

பிரபல தொலைக்காட்சி சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்வையாளர்களால் அதிகம் பார்க்கப்பட்ட சீரியல்களில் ஒன்றாகும். மேலும் இந்த சீரியல் கதாபாத்திரங்கள் ரசிகர்களுடன் நன்கு பரிட்சயமாகியுள்ளன, மேலும் இந்த சீரியல் அதிக எண்ணிக்கையிலான கூட்டு குடும்ப பிரியர்களை ஈர்த்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூர்த்தி, ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் ஆகிய நான்கு சகோதரர்களின் கதை.

sujitha dhanush dancing for beast arabic kuthu song

இந்த சீரியலில் மூர்த்தியின் மனைவியாக தனம் எனும் கதாபாத்திரத்தில் சுஜிதா தனுஷ் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சுஜிதா, அவ்வப்போது தனது புகைப்படங்களையும், தனது குடும்ப, அலுவல் சார்ந்த புகைப்படங்களையும் பதிவேற்றுவார். இந்நிலையில் பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி, பாடகி ஜோனிதா காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே, நெல்சன் மகன் ஆத்விக், திவ்யபாரதி, சஞ்சனா, ஷிவானி நாராயணன், கனிகா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்துள்ளனர். இந்த பட்டியலில் சுஜிதாவும் இணைந்துள்ளார்.

sujitha dhanush dancing for beast arabic kuthu song

பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். 125 மில்லியன் வியூசை இந்த பாடல் கடந்துள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். 'கோலமாவு கோகிலா' நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர்.

sujitha dhanush dancing for beast arabic kuthu song

பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அட.. நம்ம "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தனம் .. அரபிக் குத்து பாட்டுக்கு போட்ட வேற லெவல் ஆட்டம்.. வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

sujitha dhanush dancing for beast arabic kuthu song

People looking for online information on Arabic Kuthu, Beast, Pandian stores, Pooja Hegde, Sujitha Dhanush, Vijay will find this news story useful.