ET Others
www.garudabazaar.com

இதுவரை காணாத நயன்தாராவின் 'சூப்பர்' போட்டோவை பகிர்ந்து காதலில் உருகிய விக்னேஷ் சிவன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நயன்தாராவின் புதிய புகைப்படத்தை வெளியிட்டு விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் உருகியுள்ளார். 

Nayanthara unseen image released by vignesh shivan

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா ஐயா படம் மூலம் தனது கோலிவுட் அறிமுகத்தைத் தொடங்கினார். அதன்  பின் சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி படங்கள் மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.

அதன் பின்னர் ரீ என்ட்ரி ஆகி ராஜாராணி, ஆரம்பம், அறம், விஸ்வாசம் படங்களில் அவர் தனது சிறந்த நடிப்புத் திறமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றதால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டார்.  இவர் கடைசியாக தமிழில் நெற்றிக்கண், அண்ணாத்த படங்களில் காணப்பட்டார்.

Nayanthara unseen image released by vignesh shivan

தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார். இது போக சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர், ஷாருக்கான் மற்றும் அட்லியின் படம், அல்போன்ஸ் புத்ரனின் கோல்ட் படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் காட்பாதர் படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்தார், இயக்குனர் ராஜாவுடன் எடுத்த புகைப்படமும் வெளியானது. 

இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். வெளியூர் செல்லும் போதும், எங்காவது கோவிலுக்கு பயணம் மேற்கொள்ளும் போதும், அது தொடர்பான புகைப்படங்களை பகிர்வார். சமீபத்தில், காதலர் தினத்தன்று கூட, நயனுடன் விக்னேஷ் சிவன் இருக்கும் புகைப்படங்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர், தாங்கள் வாங்கியுள்ள புதிய இன்னோவா காருக்கு பாடிகாட் முனீஸ்வரன் கோவிலில் பூஜை போடும் புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகின. இந்நிலையில் மகளிர் தினத்தில் நயன்தாராவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அதில், "உண்மை நம் வாழ்வில் பெண்கள் தான்! நம்மை உருவாக்குகின்றனர்! அதுவே நம்மை நிறைவு செய்யும்! நம் வாழ்க்கைக்கும், நாம் செய்யும் அனைத்திற்கும் அர்த்தம் தருபவர் பெண்கள் தான்!

Nayanthara unseen image released by vignesh shivan

இன்று மட்டும் அல்ல! ஒவ்வொரு நாளும் அவர்களின் நாள்! வார்த்தைகளை விட செயல்கள் சத்தமாக பேசுகின்றன! எனவே இந்த இடத்தை, சுற்றியுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் அழகான இடமாக மாற்றுவோம்! தைரியமான, அழகான, வலிமையான மற்றும் அற்புதமான பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்! :)" என நயன்தாராவின் புகைப்படத்தை பகிர்ந்து கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara unseen image released by vignesh shivan

People looking for online information on Nayanthara, Nayanthara Unseen Images, Vignesh Sivan, Womens day will find this news story useful.