யுவன் - பத்ரி கூட்டணியில் உருவாகும் புதுப்படத்தில் இணைந்த மற்றொரு காமெடி பிரபலம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 06, 2019 01:12 PM
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் ரோபோ சங்கர் இணைந்துள்ளார்.

‘பானா காத்தாடி’, ‘செம போத ஆகாதே’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கும் இப்படத்தில் ரியோ ராஜ்க்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் பால சரவணன் மற்றும் முனிஸ்காந்த் சமீபத்தில் படக்குழுவில் இணைந்தார்.
தற்போது அவரை தொடர்ந்து மற்றொரு காமெடி நடிகரான ரோபோ சங்கர் தற்போது இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Ivar irukrapo definita comedy ku panjamae irukathu😂 We are excited and happy to have @ActorRoboSankar onboard #YuvanBadri3 🤩@rio_raj @nambessan_ramya @dirbadri @thisisysr @karnamurthyac @sinthanl @DoneChannel1 @gobeatroute pic.twitter.com/JqsYODWLf5
— Positive Print Studios (@positiveprint_) November 6, 2019