யுவன் - ரியோ இணையும் படத்தில் ஒப்பந்தமாக கலக்கல் காமெடி ஸ்டார்ஸ்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 05, 2019 03:17 PM
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் முனிஷ்காந்த் இணைந்துள்ளார்.

‘பானா காத்தாடி’, ‘செம போத ஆகாதே’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கும் இப்படத்தில் ரியோ ராஜ்க்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் பால சரவணன் சமீபத்தில் படக்குழுவில் இணைந்தார்.
தற்போது அவரை தொடர்ந்து மற்றொரு காமெடி நடிகரான முனிஷ்காந்த் தற்போது இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பாசிட்டிவ் ப்ரிண்ட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
One of the most unique supporting actors in Tamil cinema. His comedy - top class, his expressions - hilarious! We are very happy to have #Muniskanth onboard #YuvanBadri3 🥳😂@rio_raj @nambessan_ramya @dirbadri @thisisysr @karnamurthyac @sinthanl @DoneChannel1 @gobeatroute pic.twitter.com/V5O8OGTA53
— Positive Print Studios (@positiveprint_) November 5, 2019