பிக்பாஸ் கவினுக்கு பிறகு இந்த டிவி ஸ்டாருடன் ஜோடி சேரும் ரம்யா நம்பீசன்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 14, 2019 11:45 AM
பிரபல விஜேவாகவும் தொலைக்காட்சி தொடரான சரவணன் மீனாட்சியின் மூலமும் ரசிகர்களால் பரவலாக அறியப்படுபவர் ரியோ ராஜ். இவர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படத்தை கார்த்திக் வேணுகோபால் இயக்க, சபீர் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். யு.கே.செந்தில்குமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் ஆர்ஜே விக்னேஷ் காந்த், நாஞ்சில் சம்பத், ராதா ரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இதனையடுத்து ரியோ ராஜ் நடிக்கும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. பானா காத்தாடி, செம போத ஆகாத படங்களின் இயக்குநர் பத்ரி வெங்கடேசன் இந்த படத்தை இயக்கவிருக்கிறாராம்.
யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைக்க உள்ளார். மேலும் இப்படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை ராஜேஷ் என்பவர் தயாரிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு ராஜ கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.