வேற லெவல்ல இருக்க போகுது.. ரோபோ சங்கரின் புதிய குக்கிங் ஷோ..! பெயர் என்ன தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்குக்கிங் நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்களிடையே உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது. குறிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகளவு மக்கள் கண்டுகளிக்கும் நிகழ்ச்சியாகவும் சமையல் நிகழ்ச்சிகள்தான் முன்னணியில் இருக்கின்றன.

அந்த வகையில் நடிகர் ரோபோ சங்கர் குருஷி இணைந்து தொகுத்துவழங்கும் நிகழ்ச்சி "பொங்குறோம் திங்கிறோம்" .
முழுக்க முழுக்க நகைச்சுவையோடு இந்த சமையல் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறவிருக்கிறது, மலேசியாவில் மலேசிய உணவுகளைப்பற்றியும் இந்த நிகழ்ச்சியில் முன்னிலைப்படுத்தவிருக்கிறார்கள்.
இந்த 'பொங்குறோம் திங்கிறோம்' நிகழ்ச்சிக்கு கிரேஷ்கருணாஸ் மற்றும் சமையல் கலை நிபுணர் வினோத்குமார் நடுவர்களாக பணியாற்றுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அமுதவாணன், தங்கதுரை, நாஞ்சில் விஜயன், ஷர்மிளா, சம்யுக்தா, ஆகாஷ், பிரியா, உதயா, சில்மிசம்சிவா, சாய், ரஞ்சித், இந்திரஜாரோபோசங்கர், சாய், போட்டியளர்களாக பங்குபெறுகின்றனர்.
நகைச்சுவையோடு , விதவிதமான உணவுவகைகளையும் கண்களுக்கு விருந்தாக்க தயாராகி வருகிறது 'பொங்குறோம் திங்கிறோம்'. இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சி அல்லது யூடியூப் சேனலில் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்றுவருகிறது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- Exclusive: Pugazh-க்கு கல்யாணம் ஆகிடுச்சா 😱😨? உண்மையை உடைத்த Cook With Comali Pugazh
- 🔴VIDEO:Rithika - “Bala-வ Love பண்றேனா? Please புரிஞ்சுக்கோங்கப்பா..“ Live Singing | Cook With Comali
- 🔴 Video: Finals-ல ARR Sir முன்னாடி பாடினேன், ஆனா... CWC Rithika’s Live Fun
- Sivaangi கண்டிப்பா என்ட திட்டு வாங்கிருப்பா🤣 என் Career-லயே கஷ்டமானது CWC தான் - Shakeela Exclusive