www.garudabazaar.com

"சிம்பு.. யுவன்.. காளிதாஸ் ஜெயராம்!".. புது காம்போவா இருக்கே? சம்பவம் Loading! விஷயம் என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மிக அண்மையில், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து எடுத்த ஒரு ஃபோட்டோவை பகிர்ந்து, “நிறைய நல்ல செய்திகள் அடுத்து வருகின்றன!” என பதிவிட்டிருந்தார்.

Simbu Yuvan music album starring kalidas jeyaram megha akash

அடுத்த நாள், நடிகர் காளிதாஸ் ஜெயராம், யுவனுடன் இணைந்து எடுத்த ஒரு வைரல் ஃபோட்டோவை வெளியிட்டார். மேலும் சிம்புவைக் டேக் செய்து, "சிறந்த விஷயங்கள் வந்துகொண்டே இருக்கின்றன!" என்று குறிப்பிட்டிருந்தார்.  இந்நிலையில் தான், யுவனின் மியூசிக் லேபிளின் கீழ், சிம்பு ஒரு பாடலைப் பாடியுள்ளதும், காளிதாஸ் ஜெயராம் மற்றும் மேகா ஆகாஷ் நடித்துள்ள இந்த பாடல் வீடியோ, கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு சிட்டி ஸ்டுடியோ மற்றும் ஈ.சி.ஆரில் உள்ள வீடு ஒன்றில் படமாக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. 

இந்த பாடலுக்கு அறிமுக இசையமைப்பாளர் Ak பிரியன் இசையமைத்துள்ளார். சாண்டி மாஸ்டர் இந்த பாடலுக்கு, நடனப பயிற்சி அளித்து, நடனம் ஆடியுள்ளார். டோங்லி ஜம்போ இதை படமாக்க, விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூலை மாதம், இந்த பாடலின் வீடியோவை வெளியிட இந்த குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சுயாதீன இசையை ஊக்குவிக்க விரும்பும் யுவன் அண்மையில் தான் எஞ்ஜாயி எஞ்சாமி பாடல் பாடி புகழ் பெற்றவரான, 'தெருக்குரல் அறிவு'டன் இணைந்து "டோண்ட் டச் மீ" என்கிற பாடலை இசையமைத்து, தமது U1Records-ன் கீழ் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ப்ரியங்கா சோப்ராவின் சொந்த ரெஸ்டோரண்ட்..! .. அதுவும் நியூயார்க்கில்.. என்ன பெயர் தெரியுமா? Trending ஃபோட்டோஸ்!

Simbu Yuvan music album starring kalidas jeyaram megha akash

People looking for online information on Kalidas Jayaram, Megha Akash, Silambarasan TR, Yuvan Shankar Raja will find this news story useful.