பிகில் டிரெய்லரில் என் பொண்ண பார்த்ததும் கண் கலங்கிட்டேன் - உணர்ச்சி வசப்பட்ட பிரபல நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Robo Sankar Tweet About Thalapthy Vijay Bigil Trailer

சமீபத்தில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றதை தொடர்ந்து இப்படத்தின் டிரைலர் (அக்.12ம்) தேதி மாலை 6 மணிக்கு ரிலீசானது. பிகில் படத்தில் விஜய்யின் வித்தியாசமான லுக், மாஸ் கிளப்பும் அவரது வசனங்கள், ஸ்டைல் என அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்நிலையில் விஜய் டிவி பிரபலமும் பிரபல நகைச்சுவை நடிகருமான ரோபோ ஷங்கர் தனது ட்விட்டர் பதிவில்,. பிகில்’பட ட்ரெயிலரில் என் மகளைப் பார்த்ததும் என் கண்கள் கலங்கிவிட்டன. அப்படத்தில் நடிக்க என் மகளுக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கிய அட்லி சார்,விஜய் சார் இருவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி...ட்ரெயிலர் மிக அபாரமாக வந்திருக்கிறது...என்று பதிவிட்டிருக்கிறார்.