www.garudabazaar.com

"ஹேப்பி பர்த்டே கிருத்திகா"... சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழுவினர்! வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொதுவாகவே திரையுலகில் பெண் இயக்குநர்கள் விரல்விட்டு எண்ணக்கூடுய அளவிற்கே இருக்கிறார்கள். அந்த வரிசையில் தமிழில் வெளியான 'வணக்கம் சென்னை’படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. 

Director krithika udhaynithi birthday calibration

அதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் ‘காளி’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நுட்பமான திரைக்கதைகளை எழுதி அதற்கு காட்சி வடிவம் கொடுப்பதில் கைதேர்ந்தவர் என்கிற அளவிற்கு இப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

Director krithika udhaynithi birthday calibration

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தனது மூன்றாவது படம் குறித்து அதிகாரபூர்வமாக கடந்த ஜூன் 5 ஆம் தேதி வெளியிட்டிருந்தார் கிருத்திகா. இப்படத்தில், காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

Director krithika udhaynithi birthday calibration

இந்நிலையில் கிருத்திகா தனது 40 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனையொட்டி காளிதாஸ் ஜெயராம், காளி வெங்கட், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அவரது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறதும். திரையுலக பிரபலங்கள் பலரும் கிருத்திகா உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Director krithika udhaynithi birthday calibration

People looking for online information on KiruthigaUdhayanidhi will find this news story useful.