www.garudabazaar.com
iTechUS

"விக்ரமன் - ரச்சிதா Chemistry நல்லா இருக்கு, ஆனா என் கூட".. ஷிவினிடம் போட்டு உடைத்த ராபர்ட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Robert Master about rachitha and vikraman dance in task

Also Read | "நடுக்கடல்ல 30 கோடி ரூபாய்க்கு வீடு".. கலாய்த்த அசிம், ADK.. ஜிபி முத்து கொடுத்த Thug Life 😅!!

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். மேலும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி உள்ளிட்டோரும் பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, தனலட்சுமி மற்றும் மணிகண்டா ஆகியோரும் தற்போது சர்ப்ரைஸாக நுழைந்துள்ளனர்.

Robert Master about rachitha and vikraman dance in task

பழைய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வருவது பார்வையாளர்களையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

இதனிடையே, ரச்சிதா பற்றி ராபர்ட் மாஸ்டர் பேசும் விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது. முன்னதாக பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ரச்சிதாவை தொந்தரவு செய்து கொண்டும், ஜாலியாக ஏதாவது பேசிக் கொண்டும் இருப்பார் ராபர்ட் மாஸ்டர்.

Robert Master about rachitha and vikraman dance in task

இந்த நிலையில் தற்போது ரச்சிதா பற்றி ஷிவினிடம் பேசும் ராபர்ட், கேரக்டர் டாஸ்க்கில் சரோஜா தேவி போல வலம் வந்த ரச்சிதா டான்ஸ் ஆடியது பற்றி பேசுகையில், "அது தனி தனி டாஸ்க் தான். ஆனா, அதுல விக்ரமனும் ரச்சிதாவும் சேர்ந்து ஆடுனாங்கல்ல, நல்லா க்ளோசா தான் ஆடுனாங்க. ரெண்டு பேருக்கும் நடுவுல கெமிஸ்ட்ரி நல்லா இருந்தது. ஒட்டாதவங்க நடுவுல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் பண்ணிட்டு, ஒட்டுற நமக்கு ஏன் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் பண்ணல" என தெரிவித்தார்.

Robert Master about rachitha and vikraman dance in task

முன்னதாக, ராஜா ராணி டாஸ்க்கில் தன்னுடன் இணைந்து ரச்சிதா சிறப்பாக ஆடவில்லை என்பதைத் தான் ராபர்ட் அப்படி குறிப்பிட்டுள்ளார். இது தவிர ராஜா ராணி டாஸ்க்கில் ரச்சிதாவுக்கும் தனக்கும் இடையே நடந்த உரையாடல்கள் குறித்தும் ஷிவினிடம் பேசிக் கொண்டிருந்தார் ராபர்ட்.

Also Read | "அறம் வெல்லும்".. ஏன் சம்மந்தமே இல்லாம இங்க பேசுறீங்க?.. தனா முன்வைத்த கேள்வி.. விக்ரமன் பதில்ஸ்!!

தொடர்புடைய இணைப்புகள்

Robert Master about rachitha and vikraman dance in task

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Rachitha, Robert master, Robert Master about rachitha, Shivin, Vikraman Dance will find this news story useful.