www.garudabazaar.com

"நீ அடங்குற மாதிரி எனக்கு தெரியல".. கதிர் Emotional ஆன நேரத்தில் ஷிவின் சொன்ன விஷயம்.. மைனா ரியாக்ஷன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Shivin tease kathirravan by his emotional myna nandhini comment

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்ட சிலரும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி உள்ளிட்டோரும் பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர்.

இதற்கிடையில், அனைவருக்கும் டாஸ்க் ஒன்று வழங்கப்படுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. உதாரணத்திற்கு லுங்கி மாற்றம் பனியன் அணிந்தபடி இருக்க வேண்டும் என்றும், தலை சீவாமல் இருக்க வேண்டும் என்றும் அசிமிடம் பிக் பாஸ் கூறி இருந்தார்.

இந்த நிலையில், கதிரவனிடம் தனது ஷூ ஒன்றை பெயிண்ட் இருக்கும் பவுலுக்குள் மூழ்கடிக்க வேண்டும் என பிக் பாஸ் டாஸ்க் கொடுப்பதாக தெரிகிறது. இதனையடுத்து, தனது ஷூ ஒன்றை பெயிண்ட்டிற்குள் கதிரவன் உலர வைக்க, "கதிர், Well Done" என பிக் பாஸ் தெரிவிக்கிறார்.

அப்போது அந்த ஷூ பற்றி பேசும் கதிரவன், "ஷூ என்பதை விட அதில் நிறைய எமோஷன் இருந்தது. ஏன்னா நான் ரொம்ப கேட்டேன்னு சொல்லிட்டு அம்மாவும், டியும் (நெருங்கிய தோழி) அதை தேடி போய் வாங்குனாங்க. ஆனா, அது கிடைக்கவே இல்ல. அந்த எமோஷன் தான் இதுல. தேங்க்ஸ் பிக் பாஸ்" என கதிரவன் கூறினார்.

சற்று மனம் கலங்க வைக்கும் டாஸ்க்காகவும் இது கதிரவனுக்கு அமைந்திருந்த நிலையில், "அப்ப முக்குனது தப்பே இல்ல" என மைனா நந்தினியிடம் ஷிவின் தெரிவிக்கிறார். கதிரவனின் அம்மா மற்றும் அவரது நெருங்கிய தோழி ஆகியோர் இதனை வாங்க முற்பட்டது பற்றி கதிரவன் பேசியதை தான் ஷிவின் அப்படி குறிப்பிட்டார் என தெரிகிறது.

இதனைக் கேட்டதும், "நீ அடங்குற மாதிரி எனக்கு தெரியல" என ஷிவினிடம் மைனா நந்தினி கூறுகிறார். என்ன என விக்ரமன் கேட்டதும், "அவ கலாய்ச்சுட்டு போறா" என மைனா நந்தினி கூறினார்.

தொடர்புடைய இணைப்புகள்

Shivin tease kathirravan by his emotional myna nandhini comment

People looking for online information on Bigg boss 6 tamil, Kathirravan, Myna Nandhini, Shivin will find this news story useful.