''ரூ.25 லட்சம் அளித்துவிட்டு ,கண்டிஷன் போட்டார்'' - ஆர்.கே. செல்வமணி சொன்ன அந்த நடிகர் யார்?
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக நாட்டில் வணிகம் சார்ந்த விஷயங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக படங்களின் ரிலீஸ், படப்பிடிப்பு என அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் திரைத்துறை பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தினப்படி ஊதியம் பெறும் திரைப்பட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனையடுத்து அவர்களுக்காக உதவி கேட்டு ஃபெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கைவிடுத்திருந்தார்.
இதனையடுத்து பல்வேறு திரைப்பட பிரபலங்கள் பலர் பணமாகவும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களாகவும் அளித்து உதவிவருகின்றனர். இதுகுறித்து செய்திகள் அவ்வப்போது வெளியாகிவருகிறது.
இந்நிலையில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, Behindwoods TV-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் அளித்ததாகவும், ஆனால் தனது பெயரை வெளியில் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் ஆர்.கே.செல்வமணி குறிப்பிட்ட அந்த நபர் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் என்று எங்களுக்கு தெரியவந்துள்ளது.
நடிகர் லாரன்ஸ், எப்பொழுதும் போல் மக்களுக்கு கஷ்டமோ, பேரிழப்போ நடக்கும் போது தொடர்ந்து அவர் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இதே போல் அவர் சென்னை வெள்ளம், கஜா புயல் உள்ளிட்ட பேரிடர்களின் போதும் உதவி செய்திருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
''ரூ.25 லட்சம் அளித்துவிட்டு ,கண்டிஷன் போட்டார்'' - ஆர்.கே. செல்வமணி சொன்ன அந்த நடிகர் யார்? வீடியோ