KUSHBOO : தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான குஷ்பு .. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மும்பை : நடிகை குஷ்பு, தனது தந்தையால் தன்னுடைய சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "Kids எல்லாம் புடிச்சுட்டாரு"... தோசைல கலையை கலந்து ஊத்திய சமையல் கலைஞர்.. சபாஷ் போட வைத்த வீடியோ!!
ரசிகர்களால் கோயில் கட்டி கொண்டாடப்படும் அளவிற்கு 90களில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவும் நடிகையாகவும் விளங்கி வரும்ந் அடிகை குஷ்பு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக விளங்கி வரும் திரைப்பட நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக அண்மையில் பொறுப்பேற்றுள்ளார்.
இதனிடையே தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய நடிகை குஷ்பு, தனக்கு சிறுவயதில் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பேசியுள்ளார். அதில், “இளம் வயதில் ஒரு குழந்தை துன்புறுத்தப்பட்டால், அது ஆண் குழந்தையானாலும் சரி, பெண் குழந்தையானாலும் சரி, அந்த காயம் வாழ்நாள் முழுவதும் நீங்காமல் இருக்கும்” என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசியவர், தனது தாயாரும் தனது தந்தையிடம் அடிவாங்குவது உள்ளிட்ட மோசமான வாழ்வை சந்தித்ததாகவும், தானும் தன் தந்தையிடம் அடிவாங்கியதாகவும் குறிப்பிட்ட நடிகை குஷ்பு, தனது தந்தை தனது ஒரே மகளென்றும் பாராமல், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதுவும் தன்னுடைய 8 வயதில் நிகழ்ந்ததாகவும் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மேலும் இப்படி அடிவாங்குவதும், துன்புறுத்தலுக்கு ஆளாவது தங்களது பிறப்புரிமை என தனது தந்தை கருதியதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.
குடும்ப உறுப்பினர்களின் நலன் கருதி மௌனம் காத்த குஷ்பு, தனது 15வது வயதில் தனக்கு நேர்ந்ததை வெளிப்படையாக கூறியுள்ளார். அப்போதும் தன் தந்தை என்ன செய்தாலும் சகித்துக்கொண்டிருந்த தன் அம்மா, இந்த விஷயத்தில் என்ன சொல்வாரென பயந்த குஷ்பு, தனக்கு நடந்ததை பற்றி வெளிப்படையாக பேச ஆரம்பித்த அடுத்த வருடத்திலேயே, ஒருவேளை உணவுக்கே சிரமப்படும் நிலையில் தங்களது தந்தை தங்களை விட்டுச்சென்றுவிட்டார் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Also Read | சாலையில் சென்றவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பாலிவுட் நடிகர் சன்னி தியோல்.. வைரலாகும் வீடியோ..!

மற்ற செய்திகள்
