’சொல்ல வார்த்தைகளே இல்லை…’ ரசிகர்களின் ஆரவாரத்தால் நெகிழ்ந்து போன பரத்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 16, 2019 02:32 PM
நடிகர் பரத் - அறிமுக இயக்குநர் ஸ்ரீ செந்திலின் கூட்டணியில் உருவான திரைப்படம் ’காளிதாஸ்’. மிஸ்ட்ரி த்ரில்லரான இத்திரைப்படத்தில் ’இஷ்க்’ மலையாள திரைப்படத்தில் நடித்த ஆன் ஷீத்தல் (Ann Sheetal), கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் என்று பலரின் நடித்திருந்தனர்.

சில தினங்களுக்கு முன் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் பரத் 'காளிதாஸ்’ திரைப்படத்தை திரையரங்கில் சென்று பார்த்த காணொலியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில் ரசிகர்கள் பரத்தைக் கண்டு ஆரவாரம் எழுப்பி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். ”ரசிகர்கள் தந்த ஆதரவுக்கு என் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று நெகிழ்ச்சியாக கேப்ஷன் கொடுத்திருக்கிறார் பரத்.
Tags : Bharath, Kaalidas Tamil