www.garudabazaar.com

"என்னை இங்கே வந்து பாருங்க 😍".. மாலத்தீவு கடற்கரையில் பிரபல 'துருவ நட்சத்திரம்' நடிகை! வைரல் VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்க கூடியவர் நடிகை ரிது வர்மா.

Ritu Varma Shared Her Maldives Vacation Photos Videos

Source - Ritu Varma Instagram

நவநாகரீக நகர்ப்புற வேடங்களிலும் மற்றும் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற வேடங்களிலும் பொருந்தக்கூடிய அரிதானவர்களில் இவரும் ஒருவர். தெலுங்கில், 'பாட்ஷா', ‘பெல்லி சூப்புலு’ படத்தின் மூலம் கவனத்தைத் ஈர்த்திலிருந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழ் மக்களைக் கவர்ந்தது வரை, ரிது வர்மா ஒரு சிறந்த நடிகையாக தனது திறனை நிரூபித்துள்ளார்.

Ritu Varma Shared Her Maldives Vacation Photos Videos

Source - Ritu Varma Instagram

சமீபத்தில் ஒகே ஒக ஜீவிதம் (தெலுங்கு), அசோக் செல்வனின் நித்தம் ஒரு வானம்  படத்திலும் நடித்திருந்தார். அமேசான் பிரைம் ஒடிடிக்காக "மாடர்ன் லவ் ஹைதராபாத்'  என்ற வெப் சீரிஸூம் ரீது வர்மா நடிப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அவர் அடுத்தடுத்து மிக சுவராஸ்யமான பல படங்களில் நடித்து வருகிறார், அவை தயாரிப்பின்  பல்வேறு கட்டங்களில் உள்ளன. குறிப்பாக கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் உடன் துருவ நட்சத்திரம், விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி படங்கள் குறிப்பிடத்தக்கது.

Ritu Varma Shared Her Maldives Vacation Photos Videos

Source - Ritu Varma Instagram

ரிது வர்மா, விரைவில் மலையாள திரையுலகிலும் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ritu Varma Shared Her Maldives Vacation Photos Videos

Source - Ritu Varma Instagram

இந்நிலையில் ரீது வர்மா, கடந்த மார்ச் 10 ஆம் தேதி தனது 33-வது பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடினார். அதற்காக மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். மாலத்தீவு கடற்கரையில் இருந்து ரீது வர்மா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இன்று சில புகைப்படங்களை பகிர்ந்து, "கடலும் வானமும் சந்திக்கும் இடத்தில் எனனை வந்து காணலாம்" என பதிவிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritu Varma (@rituvarma)

Tags : Ritu Varma

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ritu Varma Shared Her Maldives Vacation Photos Videos

People looking for online information on Ritu Varma will find this news story useful.