www.garudabazaar.com

“மனசிதைவுக்கு ஆளாகும் கேரக்டர்.. நடிச்ச பிறகு இன்னும் மீளல”.. நடிகை ரித்திகா சிங் உருக்கம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Inbox Pictures சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”.  கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Rithika Singh On her next film In Car movie

Images are subject to © copyright to their respective owners.

Also Read | தேஜாவு பட இயக்குநரின் அடுத்த படம்.. இசையமைக்கும் முதல் நீ முடிவும் நீ பட இயக்குநர்..!

இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா இப்படத்தை வழங்குகிறார். மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்  இயக்குநர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது : - "இன் கார்" படம் என் வாழ்வில், என் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்முறை ஒவ்வொரு நாளும், இந்தியா முழுக்க நடந்துகொண்டே இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகள் பலர், பல துன்பமான நிகழ்வுகளைச் சந்திக்கின்றனர். என்னுடைய வெளிநாட்டு நண்பர்கள் பலரும் இது பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நாமே செய்திகளில் தினமும் இது போன்ற விஷயங்களைக் கடந்து போகிறோம். இது ஏன் நடக்கிறது. இதை செய்பவர்கள் மிக இயல்பான வாழ்க்கை வாழும் மனிதர்கள், அவர்களுக்கு குடும்பம் இருக்கிறது, நம்மைப்போல் தான் அவர்களும். எது அவர்களை இது போன்ற குற்றங்களைச் செய்ய வைக்கிறது. கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்படும் பெண் என்னென்ன சித்ரவதைக்கு ஆளாகிறாள் அந்த நொடி எத்தனை மன ரீதியான பிரச்சனைகளைத் தரும்,  இதையெல்லாம் சொல்ல நினைத்து உருவானதே "இன் கார்". இது அனைவருக்கும் செல்ல வேண்டும் என்ற நோக்கில் தான் அனைத்து மொழிகளிலும் வெளியிடுகிறோம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

Rithika Singh On her next film In Car movie

Images are subject to © copyright to their respective owners.

இந்நிகழ்வில் நடிகை ரித்திகா சிங் பேசியதாவது:- "இன் கார்" படம் எனக்கு மிகப்பெரும் சவாலானதாக இருந்தது. ஒரு கடத்தலுக்கு உள்ளாகும் பெண் எத்தனை மனச்சிதைவுக்கு உள்ளாகிறாள், அவள் துன்பத்தின் எந்த எல்லை வரை செல்கிறாள், என்பதை நுணுக்கமாக இந்தப்படம் சொல்லும். இந்தப்படத்தில் நடித்த பிறகும் என்னால் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வர முடியவில்லை. எனக்குள் பெரும் பாதிப்பை "இன் கார்" படம் ஏற்படுத்தியது. இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் ஹர்ஷ் வர்தனுக்க்கு நன்றி. இந்தப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேருங்கள் நன்றி.

நடிகர்கள் :

ரித்திகா சிங்

சந்தீப் கோயத்

மனிஷ் ஜான்ஜோலியா

ஞான பிரகாஷ்

தொழில்நுட்ப குழு :

தயாரிப்பு நிறுவனம் : Inbox Pictures

தயாரிப்பு : அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி

எழுத்து இயக்கம் : ஹர்ஷ் வர்தன்

ஒளிப்பதிவு : மிதுன் கங்கோபாத்யாய்

எடிட்டர்: மாணிக் திவார்

சண்டைப்பயிற்சி : சுனில் ரோட்ரிக்ஸ்

மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (AIM)

Also Read | "ஒரே நேரத்துல 16 தோல்வி படங்களைலாம் கொடுத்தேன்..!" - விமர்சனங்கள் குறித்து அக்‌ஷய் குமார்..

Rithika Singh On her next film In Car movie

People looking for online information on In Car, Rithika Singh will find this news story useful.