www.garudabazaar.com

கார் விபத்தில் சிக்கிய பிரபல ஹீரோயின் - காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல கன்னட நடிகையான ரிஷிகா சிங் நேற்று ( 30/07/2020) பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு நண்பர்களுடன் காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது பெங்களூரு அருகே மவல்லிபுரா என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது.

Popular actress injured in car accident ft Rishika Singh | கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை ரிஷிகா சிங்

இந்த விபத்தில் காரின் முன் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாம். மேலும் படுகாயமடைந்த நடிகை ரிஷிகா சிங் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு வாரங்களில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனராம்.

நடிகை ரிஷிகா கன்னட இயக்குநர் ராஜேந்திர சிங் பாபு என்பவரின் மகளும் பிரபல நடிகர் ஆதித்யாவின் தங்கையும் ஆவார். ரிஷிகா சிங் கடந்த 2011 ஆம் ஆண்டு கண்டீரவா  என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்

Popular actress injured in car accident ft Rishika Singh | கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை ரிஷிகா சிங்

People looking for online information on Rishika Singh will find this news story useful.