ஷில்பா ஷெட்டி டான்சால் வைரலான தென்இந்திய பாடல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கர்நாடகாவை சேர்ந்த ஷில்பா ஷெட்டிக்கு பள்ளி நாட்களிலேயே பரதநாட்டியத்திலும், விளையாட்டிலும் ஆர்வம். குளிர்பான விளம்பரம் ஒன்றில் நடித்த இவருக்கு பாலிவுட் கதவுகள் திறக்க புகழ் ஏணியில் வேகமாக ஏறினார்.

Shilpa Shetty tik tok butta bomma song video went viral!

கவர்ச்சியான கதாப்பாத்திரங்களில் பெரும்பாலும் தலை காட்டிய இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ, குஷி ஆகிய படங்களில் முகம் காட்டினார். இப்போது வரும் பட வாய்ப்புகளை தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. உடல் ஆரோக்கியம் மீது ஆர்வம் கொண்ட இவர் யோகா, உடற்பயிற்சி வெளிநாட்டுப் பயணங்கள் என்று வாழ்வை ஜாலியாக கழித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் இவரது யோகா வீடியோவால் இணையத்தில் காட்டுத்தீ அனல் பறந்தது.

டிக் டாக்கில் கணக்கு வைத்திருக்கும் எக்கச்சக்கமான பாலிவுட் பிரபலங்களில் ஷில்பா ஷெட்டியும் ஒருவர். அவர் வெளியிட்ட வீடியோதான் சமீபத்தில் செம வைரலாகி உள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ’அலாவைகுந்தபுரம்லோ’ தெலுங்கு படத்தின் ’புட்ட பொம்மா’ பாடலுக்கு அவர் ஆடிய நடனம் டிஜிட்டல் வைரசாக பரவி, இதுவரை 1.7 மில்லியன் பேரை தொற்றியுள்ளது.

@theshilpashetty

Bhutta Booma Shilpa Shetty Style 💃 #bhuttabooma #telegu #lovedanceing #dancewithshilpa #duetwithme #fyp

♬ original sound - SwAmy PriyAzz💕

Entertainment sub editor