www.garudabazaar.com

'ரியோ செஞ்ச அதே தவறை தான் ஆரியும்.. ஆனா'... கொந்தளிக்கும் ரியோ ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் நிஷா மேற்கொண்ட சில முயற்சிகள் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரியோ சிறந்த போட்டியாளர் என்று நிஷாவையும், சுவாரஸ்யமற்ற போட்டியாளர் என்று அனிதாவையும் கூறினார். அதற்கு அவர் காரணமாக சொன்னதை அனிதா கேள்வி எழுப்பினார். இதனிடையே நேற்று கமல்ஹாசனும் அனிதா சொன்னதையே வழிமொழிந்ததை அடுத்து போட்டியாளர்கள் பலரும் மறுவாக்கெடுப்பு நடத்தி நிஷாவை சுவாரஸ்யமற்ற  போட்டியாளர் என்று அறிவித்தனர்.

rio fans questions aari on this topic கொந்தளிக்கும் ரியோ ரசிகர்க

இதன் பின்னர் ரியோ கூறும்பொழுது "அனிதா இவ்வளவு தெளிவாக கூறியிருந்தால் நான் அனிதாவை நாமினேட் செய்திருக்க மாட்டேன்" என்றார். அதற்கு ஆரி "ரியோவால் ஒரு வாரம் முழுக்க நடந்தது கூட ஞாபகம் வைத்து சரியாக சொல்லமுடியவில்லை, அனிதா சொல்லி தான் அவருக்கு தெரிய வேண்டுமா?" என்று அவரை குற்றப்படுத்தினார். இந்நிலையில் வைரலாகும் சில பதிவுகளில் ரியோ ரசிகர்கள் ஒரு கேள்வி எழுப்பியுள்ளனர். "ஆரியும் நிஷாவுக்கு தான் சிறந்த போட்டியாளர் என்ற பட்டத்தைக் கொடுத்தார். அதன் பிறகு கமல் ஹாசன் பேசிய பிறகு தனது கருத்தை மாற்றினார். இந்நிலையில் ரியோ செய்த அதே தவறை தான் ஆரியும் செய்திருக்கிறார். ஒரு வாரம் முழுக்க நடந்ததும் ஞாபகம் வைத்து சரியாக சொல்ல முடியாத நிலையில் அவர் ரியோவை மட்டும் குற்றப்படுத்துவது எவ்வாறு சரியாகும்" என்பது போல் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags : Rio, Aari

தொடர்புடைய இணைப்புகள்

rio fans questions aari on this topic கொந்தளிக்கும் ரியோ ரசிகர்க

People looking for online information on Aari, Rio will find this news story useful.