www.garudabazaar.com

சித்ரா தனது நண்பருக்கு கடைசியா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்... வைரலாகும் உருக்கமான குரல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தார், இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் அவர் மரணமடைந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவருடைய பாசிட்டிவ் குணம் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்தது.

chitra last voice message to actor madhan சித்ரா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்

இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை.  இந்நிலையில் நடிகை சித்ரா கடைசியாக தன் நண்பர் மற்றும் விஜய் டிவி நடிகரான மதனுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் தனது குரலை பதிவு செய்துள்ள அவர் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதன். நீயும் நானும் இருக்கும் ஒரு போட்டோவை ரெண்டு நாளா தேடினேன் கிடைக்கவே இல்ல. உன்னிடம் இருந்தா எனக்கு அனுப்பி வை, அதை நான் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக போடுகிறேன்" என்பதுபோல் வெள்ளந்தியாக கூறுகிறார்.

சித்ரா தனது நண்பருக்கு கடைசியா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்... வைரலாகும் உருக்கமான குரல்..! வீடியோ

Tags : Chitra

chitra last voice message to actor madhan சித்ரா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்

People looking for online information on Chitra will find this news story useful.