அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடிச்சி தூக்கு’ பாடல் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான திரைப்படம் ‘விஸ்வாசம்’. அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுமார் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் படமாக திகழ்கிறது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற முழுக்க முழுக்க குத்துப்பாடலான ‘அடிச்சி தூக்கு’ பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. மதுரை வட்டார வழக்கில் பாடலாசிரியர் விவேகா எழுதிய ‘அடிச்சி தூக்கு’ பாடல் பட்டி தொட்டி எங்கும் சூப்பர்ஹிட்டானது. டி.இமான் இசையில் இமான், ஆதித்யா, நாராயணன் உள்ளிட்டோர் பாடிய இந்த பாடலை பாடியிருந்தனர். இந்த பாடலில் சோலோவாக அஜித் ஆடிய குத்தாட்டம் தல ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இந்நிலையில், இப்பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை #GloriousAdchithooku50MViews என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அடிச்சி தூக்கு பாடலின் சாதனையை கொண்டாடி வருகின்றனர்.
‘டானே டர்ராவான் தெளலத்து கிர்ராவான்..’ - தல அஜித்துக்கு 50 மில்லியன்! வீடியோ