Hyderabad House News Banner USA
Game Over Others Banner USA
Fakir Other Banner USA

''அவங்க என்னோட டைஹார்ட் ஃபேன்ஸ்'' - பிரபாஸின் 'சாஹோ' டீஸர் எப்படி இருக்கு ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பாகுபலி' திரைப்படங்களின் மூலம் தமிழ்நாட்டிலும் ரசிகர்களை கொண்டவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். இவர் தற்போது சாஹோ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

Review of Prabhas and Shraddha Kapoors Saaho Teaser

சுஜீத் என்பவர் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் அருண் விஜய் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேலும், இந்த படத்தில் நீல் நிதின் முகேஷ், லால், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர்  நடிக்கும் இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படம் தமிழ் தெலுங்கு ஹீந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

துக்கமோ சந்தோஷமா அத ஷேர் பண்றதுக்கு யாருமே இல்ல என்கிறார் ஷரத்தா. நான் இருக்கேன் என பிரபாஸ் சொன்னவுடன் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. இதனை வைத்து பார்க்கும் போது ஷ்ரத்தா கபூருக்கு ஏற்படும் பிரச்சனையை பிரபாஸ் எப்படி தீர்க்கிறார் என்பதே இந்த படத்தின் கதையாக இருக்கலாம்.

டீஸரில் ரேஸ் பைக், கார் சேஸிங், ஹெலிஹாப்டர், மிஷின் கண்கள், பீரங்கி, ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு வில்லன்கள் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது மிரட்டலான ஆக்ஷன் தரில்லர் நமக்கு காத்திருக்கிறது என எண்ணலாம். டீஸரில் இந்த படத்தின் விஷுவல்கள் மற்றும் பின்னணி இசை ஹாலிவுட் தரத்தில் உள்ளது.

மேலும் இறுதிக் கட்டத்தில் சிலரை பார்த்து யாரு இவங்களாம்  என பிரபாஸிடம் ஸ்ரத்தா கேட்பார். அதற்கு பிரபாஸ் என்னுடைய ஃபேன்ஸ் என்பார். பின்னர் தட தடவென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கும். அதற்கு ஷ்ரத்தா இவ்ளோ வயலன்ட்டா இருக்காங்க என்பார் அதற்கு என்னோட டைஹார்ட் ஃபேன்ஸ் என்கிறார்.  உண்மையில் சாஹோவிற்காக பிரபாஸின் டைஹார்ட் பேன்ஸ் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

''அவங்க என்னோட டைஹார்ட் ஃபேன்ஸ்'' - பிரபாஸின் 'சாஹோ' டீஸர் எப்படி இருக்கு ? வீடியோ