‘பாகுபலி’ பிரபாஸின் ‘சாஹோ’ டீசர் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பாகுபலி’ திரைப்படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சாஹோ’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Prabhas's Saaho teaser will be released on Thursday, June 13

சுஜீத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். நீல் நிதின் முகேஷ், லால், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர், ஜாக்கி ஷராஃப், சங்கே பாண்டே, மந்திரா பேடி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான ‘சாஹோ’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் போஸ்டர்கள், ஷேட்ஸ் ஆஃப் சாஹோ வீடியோக்களை அடுத்து, இப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பினை தயாரிப்புக் குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் டீசர் வரும் ஜூன்.13ம் தேதி அனைத்து ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களிலும் வெளியாகிறது. மறுநாள் ஜூன்.14ம் தேதி முதல் திரையரங்குகளில் கண்டு ரசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட்.15ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.

சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர்கள் ஷங்கர் இசான் லாய் கூட்டணி விலகியதையடுத்து, ‘சாஹோ’ படத்தின் புதிய இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கபப்டுகிறது. ‘பாகுபலி 2’ திரைப்படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.