Beast Intro April 13
Beast Others
www.garudabazaar.com

போடு வெடிய..KGF Chapter 2 பாக்ஸ் ஆபிஸில் ரெக்கார்ட் பிரேக்கிங் சாதனை..! வெளியான OFFICIAL தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2018 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் உருவாகி இந்தியா முழுவதும் வெற்றியடைந்த படம் KGF.

Record Breaking Tickets Sales for KGF Chapter 2 Movie

Also Read | தீ ஸ்பீடில் KGF Chapter -2... உலகம் முழுவதும் இம்புட்டு தியேட்டர்ல ரிலீஸா? வெளியான சூப்பர் தகவல்

இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். யாஷ் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவானது. ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த 'கே ஜி எஃப் சாப்டர் 2’ திரைப்படம் ஜூலை 16-ம் தேதி 'கே.ஜி.எஃப் 2' வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால், கொரோணா காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. பின் இன்று  தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியாகி இருக்கிறது.

Record Breaking Tickets Sales for KGF Chapter 2 Movie

இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளார். யாஷ்க்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார்.

Record Breaking Tickets Sales for KGF Chapter 2 Movie

கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் KGF Chapter 2 சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு ரிலீசாகி உள்ளது. கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகம் வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Record Breaking Tickets Sales for KGF Chapter 2 Movie

இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த 10,000 திரையரங்குகளில்  தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) ரிலீசாகி உள்ளது.

Record Breaking Tickets Sales for KGF Chapter 2 Movie

இந்நிலையில் இந்த படம் டிக்கெட் விற்பனையில் மகத்தான சாதனை புரிந்துள்ளது. ஆன்லைன் முன்பதிவில் மட்டும் இந்த படத்திற்காக சுமார் 29 லட்சம் டிக்கெட்டுகளை  ஆன்லைன் மூலம் குறிப்பாக புக் மை ஷோ மூலம் ரசிகர்கள் புக் செய்துள்ளனர். அது போக பேடிம் வாயிலாகவும் கனிசமான டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளன. இதனை BMS & படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Also Read | KGF: அடுத்த சம்பவம் இன்னும் பயங்கரமா இருக்கும்.. உருவாகும் KGF-3..! மிரட்டல் அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Record Breaking Tickets Sales for KGF Chapter 2 Movie

People looking for online information on KGF Chapter 2 Movie, KGF2, Prashanth Neel, Yash will find this news story useful.