Beast Intro April 13
Beast Others
www.garudabazaar.com

முதல் நாள்லயே தமிழ்நாட்டு தியேட்டர்கள்ல மாஸ் காட்டிய KGF Chapter 2.. இது வேற லெவல் மாஸ்! செம்ம தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கே ஜி எப் சாப்டர் - 2 படத்தின் தமிழக திரையரங்குகள் எண்ணிக்கை வெளியாகி உள்ளது.

Yash KGF Chapter 2 Tamil Nadu Theatre Count Details

Also Read | "எனக்கு தனுஷ் தான்.." ..வாவ்.. நடிகை பிரியா பவானி சங்கர் என்ன சொல்லிருக்காங்க பாருங்க

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் இன்று  தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியாகி இருக்கிறது.

Yash KGF Chapter 2 Tamil Nadu Theatre Count Details

இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

Yash KGF Chapter 2 Tamil Nadu Theatre Count Details

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார்.

கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் KGF Chapter 2 சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு ரிலீசாகி உள்ளது.

Yash KGF Chapter 2 Tamil Nadu Theatre Count Details

இந்நிலையில் இந்த படம் தமிழகம் முழுவதும் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று வினியோகஸ்தர் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Yash KGF Chapter 2 Tamil Nadu Theatre Count Details

Also Read | இவர் கூட ஒரு படம் பண்ணனும்னு ஆசை.. மனம் திறந்த பிரியா பவானி சங்கர்! யார் அந்த இயக்குனர்?

தொடர்புடைய இணைப்புகள்

Yash KGF Chapter 2 Tamil Nadu Theatre Count Details

People looking for online information on KGF Chapter 2, KGF2, KGF2 Release, Prashanth Neel, Yash will find this news story useful.