Beast Intro April 13
Beast Others
www.garudabazaar.com

KGF: அடுத்த சம்பவம் இன்னும் பயங்கரமா இருக்கும்.. உருவாகும் KGF-3..! மிரட்டல் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

KGF Chapter 3 படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

KGF Movie team Announced Next Part KGF Chapter 3

Also Read | முதல் நாள்லயே தமிழ்நாட்டு தியேட்டர்கள்ல மாஸ் காட்டிய KGF Chapter 2.. இது வேற லெவல் மாஸ்! செம்ம தகவல்

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் இன்று  தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியாகி இருக்கிறது.

இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

KGF Movie team Announced Next Part KGF Chapter 3

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார்.

கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் KGF Chapter 2 சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு ரிலீசாகி உள்ளது. கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகம் வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

KGF Movie team Announced Next Part KGF Chapter 3

இந்நிலையில் இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த 10,000 திரையரங்குகளில்  தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) ரிலீசாகி உள்ளது.

இப்படத்தின் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படத்தை புகழ்ந்து டிவிட்டர், பேஸ்புக் மூலம் பாராட்டி வருகின்றனர். அதிலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு பின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் கே‌ ஜி எப் படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

KGF Movie team Announced Next Part KGF Chapter 3

இதன் மூலம் மூன்றாம் பாகத்திற்கான அறிவிப்புக்கு ரசிகர்கள் ஏங்கி கொண்டு உள்ளனர்.

Also Read | தீ ஸ்பீடில் KGF Chapter -2... உலகம் முழுவதும் இம்புட்டு தியேட்டர்ல ரிலீஸா? வெளியான சூப்பர் தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

KGF Movie team Announced Next Part KGF Chapter 3

People looking for online information on KGF Chapter 2 Movie, KGF Chapter 3, KGF Movie team, KGF2, Prashanth Neel, Yash will find this news story useful.